இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 28, 2011

சொந்தமற்ற உயிர்.....

இறைவன் படைத்த உயிர் 
எமக்கெங்கே சொந்தமானது 
உலக பயணத்திற்கு 
பெற்றுவந்தோம் வாடகையில்

துன்பம் இன்பமென்று 
வாழ்வு சாவென்று 
ஏற்றத்தாழ்வுகளும் பல அடைந்து 
இன்னுந்தான் பயணம் தொடர்கிறதிங்கு 

எம் பாதையில் கிடைத்த 
செல்வமாய் பல உறவுகள்  
உயிருள்ளவரை  போற்றிட
உள்ளந்தான் துடிக்கிறது 


ஆச்சர்ய நிகள்வுகளாய் 
நினைத்திடாத பொழுதுகளில் 
துயரொன்று எமைத்தாக்க 
அதில்நொந்து மதியிழந்திடலாகாது 

எம்நேசத்துக்குரியவரின் 
பயணமுடிவு கண்டு வெந்தழுகிறது மனம் 
அதற்காக எமக்கே சொந்தமற்ற 
உயிர்போக்க நினைப்பதேன் 

மீளத்திரும்பிடா உயிர்நீத்து 
எம்மைநாம் கொலைசெய்து 
எவருக்கு நன்மைசெய்தோம் 
சிந்திக்கும் மனங்கள்தான் சீர்பெறுமே 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...