இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 24, 2011

ஐபிஎல் என்றொரு சூதாட்டம்

கிரிக்கட் ஆட்ட உலகில் ஒரு சூதாட்டம்
ஐபிஎல் என்றொரு கோலாட்டம்
பணக்குவியல்களின் பரிமாற்றம்
பரபரப்புகள் நிறைந்ததொரு ஆட்டம்

தேசத்தின் பகுப்பிலொரு ஆட்டம்
புதியவர்களுக்கு வாய்பளிக்குமொரு ஆட்டம்
கிரிக்கட்டில் ஒரு திருப்புமுனை ஆட்டம்
அனைவரையும் ரசித்திடவைக்கிறதிந்தாட்டம்

ஆபாச நடனங்களில் கவர்ச்சி ஆட்டம்
இளைஞர்களை கவர்ந்திளுக்கிறதிந்தாட்டம்
ஆறுகள்(six) அதிகம் அடித்திடும் ஆட்டம்
ஆவலதிகம் தருகிறதிந்தாட்டம்

கல்வி கற்கின்றவரை கெடுக்கிறதிந்தாட்டம் 
தொழிலாளரை சோம்பேறியாக்கிறதிந்தாட்டம் 
மனங்களெல்லாம் ஏற்கிறதிந்தாட்டம் 
அநாவசியங்கள் நிறைந்திருப்பதும் இந்தாட்டமே

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மையான வரிகள்..
என்று மாறுமோ இவை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அளவோடு இருந்தால் தவறில்லை..
இவைகள் அளவை மீறி விட்டது என்பது என் கருத்தும்...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு ஓட்டும் போட்டு விட்டேன்...

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ.ஹாசிம்,
'நச்' என்று நறுக்குத்தெறித்தார்போர் சொல்லியுள்ளீர்கள்.
கிரிக்கெட்... விளையாட்டு என்ற வரம்பிற்கு வெளியே சென்று விட்டது.
அது ஒரு சுரண்டல் ஆட்டம்.

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

அருமை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...