இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, May 15, 2011

வீட்டுக்கு....வீடு


கடைக்குக் கடை
வேலையற்றோரின் வீணான
விளையாட்டுக்கள்

வீதிக்கு வீதி
நளைய மன்னர்களின் தேவையற்ற
வலம் வருகைகள்

வீட்டுக்கு வீடு
தொடர் நாடகங்களில் முழ்கி வேண்டாத
கவலைகளேற்று கண்ணீர் வடிகிறது

வாழ்நாளின் விரயங்கள்
பிரதிபலனற்றுக் கழிகிறது
வாழ்வில் திருப்தியில்லையென்று
கண்ணீரும் சிந்துகிறது

நாளையின் தேவையறிந்து
இன்றைய திட்டமிடலிலும்
இன்றைய பொழுதுகளை
நாளைக்காய் வழிப்படுத்தலிலும்
வளம்பெறுவது எதிர்காலமே...

குடும்ப அங்கங்களின் அரவணைப்புடன் 
அனாவசியமான அத்துமீறல்கள் களைந்து 
வீட்டுக்கு வீடு
வியூகங்கள் வகுக்கப்படுமானால் 
நாளை நம்கையிலாகுமே.....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

நாளையின் தேவையறிந்து
இன்றைய திட்டமிடலிலும்
இன்றைய பொழுதுகளை
நாளைக்காய் வழிப்படுத்தலிலும்
வளம்பெறுவது எதிர்காலமே

very nice.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...