இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, May 19, 2011

வற்றிடாத அன்பு


அன்பிற்கு நிகர் நீதானென்று 
அல்லும்பகலும் உனைத்தொடர்ந்திட
ஆவலளித்த பாசமுனது 
ஆசை தீர்த்திடாத அன்புனது 

வானங்கள் இடிந்தீடட்டும் 
மலைகள் மணல்களாகட்டும் 
கடல்கள் வரட்சி பெறட்டும் 
உனதன்பிற்கு ஈடிணையில்லை 

நானடைந்த நட்புகளையும் 
நானடைந்த காதலிகளையும் 
நானடைந்த உறவுகளையும் 
வென்றுவிட்ட அன்புனது 

அம்மா என்றழைத்த போது 
அகிலம் மறந்த ஆரத்தழுவலில் 
ஏக்கங்களின் பிரதிபலிப்பாய் 
ஊற்றெடுக்கும் பாசமுனது 

பாசங்கலந்த பாலுட்டி
உதிரத்தில் கலந்துவிட்டதால்
நீயென்று உணரும்போதே 
நானெனை மறந்துவிடுகிறேன் 
என்னுயிர் பிருயும்வரை 
எனதன்பும் வற்றிடாதம்மா...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

தமிழர்களின் சிந்தனை களம் said...

நன்றி அருமை

மதுரை சரவணன் said...

அருமை...வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...