இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, May 2, 2011

நானும் ஓர் தீவிரவாதி

அநியாயம் கண்டு மனம்வருந்தி
தன் எழுத்துக்களால் எதிர்க்கின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்


சாக்கடை அரசினை மாற்றி
சரித்திரம் படைத்திடப் பேசுகின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்


உடன் பிறப்பினை உயிரோடு புதைத்து
உடமைகளின் அவதரிப்பினைத் தடுக்கின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்


மானத்திற்காய் போராடும் மாதுகண்டு
தடுக்கநினைத்தும் நாதியற்றுக் கண்மூடுகின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்


கண்ணெதிரே அபாயமென்று
தன்னுயிர் தீர்த்தேனும் பிறர்காத்திட முனைகின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்..


அபலம் ஒன்று நடந்தேறக் கேட்டு
துக்கம் தாளாமல் நொந்தழுகின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்


சாமான்யன் என்றுசொல்ல
மானிடங்களில் யாருமில்லை
போராட்டமே வாழ்க்கையாகும்
யாவரும் தீவிரவாதிதான்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

சசிகுமார் said...

super

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...