இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 21, 2011

எதுதான் அழகென்பது

பிறந்தவுடன் அழுகின்றகுழந்தை 
தாய்க்கென்றும் அழகுதான் 
வெற்றிகளடைந்து ஊர்போற்றும் குழந்தை 
தந்தைக்கென்றும் அழகுதான் 

பரிவோடுறவாடும் சகோதரன் 
உடன்பிறந்தவனுக்கழகுதான் 
பாசங்கலந்த பண்பான தோழன் 
நண்பனுக்கென்றுமழகுதான் 

உள்ளம் கவரந்து மகிழ்வித்த காதலன் 
காதலிக்கென்றும் அழகுதான் 
உறவில்திருப்தியளித்த கணவன் 
மனைவிக்கென்றுமழகுதான் 

மனங்களோடுள்ள அழகுகளை 
நிறங்களோடொப்பிட்டுத் தேடி
மனங்களை நாசம் செய்வதேன் - நல்ல
குணங்களுர்த்துமுன் அழகினை

ஒருமனது வெறுப்பதொன்றை 
மறுமனது ஏற்பதிலேயே 
அழகின் நிலையுணர்த்துவதை 
ஏற்கவேண்டாமா மனங்கள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...