இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, June 30, 2011

நண்பனே மறுமை காத்திருக்கிறது

நண்பனே உன்னாயுட்காலம் 
உன்னைவிட்டும் விரண்டோடுகிறது 
மண்ணறை உமக்காக 
எதிர்பார்த்திருக்கிறது 

மறுமையின் விளைநிலமான 
இவ்வுலகில் எவற்றை அறுவடைசெய்தாயோ 
அவற்றோடு மட்டும் உன் பயணம் 
ஆரம்பமாக இருக்கிறது 

தோழனே உனைப்படைத்த இறைவன் 
உனை விசாரிப்பதற்குமுன்
சுய விசாரணை செய்துகொள்
நாளை கைசேதப்பட நேரிடும் 

Monday, June 27, 2011

சினிமாவிலேன் மோகம்.....

சினிமாவெனும் சித்திரம் 
சிந்திக்க வழி செய்கிறதா 
சீரழித்து சிதைக்கின்றதா - என 
சினங்கொள்ளச்செய்கிறதே....


கலாச்சார மாசுபடுத்தல்களோடு 
கலங்கச்செய்யும் பல்லாயிரம் நிகழ்வுகள் 
சாதாரணமாய் அரங்கேறுகின்றது 
பொறுத்திடவும் முடிவதில்லை 
சரித்திரங்களும் மாறவில்லை 


தான் பெற்ற மகளை 
காமப்பேய்களுக்குப் பலிகொடுத்து 
சினிமாவில் சம்பாதித்திட அதன் 
மோகமேன் கண்ணை மறைத்திருக்கிறது 

Sunday, June 26, 2011

என் பொற்காலம்......விடியலின் சூரியன் 
உலகுக்கு வளக்காகிறது 
என் நிதர்சன வாழ்க்கைக்கு 
உதயசூரியன் நீயாகிறாய் 

உன்னதமான காதலோடு 
உறவுக்குள் உள்வாங்கினாய் 
எதிர்பார்ப்புகளுக்கதிகமாக 
எல்லாமே உகந்தளித்தாய் 

உன்னன்பில் திளைத்துவிட்டேன் 
அதிமதுரமாய் உறைந்துவிட்டேன் 
உன்தோள்மீது சாயும் பொழுதுகளை மட்டும் 
என்பொற்காலமாய் உணர்கிறேன் 

Wednesday, June 22, 2011

கருணை காட்டுவாயா ??

காத்தால மாடுமேய்க்க போனவரை
கருக்கலிலும் காணலியே
பாழாப்போன காதலால
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனுசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்குது

Sunday, June 19, 2011

தீயசெயல்கள் தீயாகிறது


தாய்ப்பால் தேடும் பாலகனுக்கு 
தாகம்தீர்த்திட மதுகொடுக்கும் உலகமிது 
வேடிக்கையின் விளையாட்டா - இல்லை 
விபரீதத்தின் அத்திவாரமா புரியவில்லை 

பச்சைமரத்தாணிபோல் பதிந்திடும் 
பாதகங்களற்ற செயல்கள் மறந்து 
வளரும் முளையினை தளிரும்போதே 
நஞ்சூட்டுகின்ற வக்கிரங்கள் 

தாயின் மார்பில் அருந்திய அமுத விவேகத்தில் 
தனைமறந்த குழந்தை  கவ்வும்போது 
தலைமீது தட்டிவிட்ட தாயின் செயல் 
தழும்பாய் நிலைகொள்கிறது சிசுவுக்கு

Saturday, June 18, 2011

அன்பே உன் மடிவேண்டும்

அன்பே என்றுமுன் மடிவேண்டும்
அன்புள்ளமுன் துணைவேண்டும்
காதலர்களாய் வாழ்ந்திட வேண்டும்
கானங்கள் பல இசைத்திட வேண்டும்

இன்பங்களுன்னால் அடைந்திட வேண்டும்
இனியொரு உலகம் மறந்திட வேண்டும்
சொந்தங்கள் நாமாய் மாறிட வேண்டும்
சரித்திரமே எம்மால் புகழ்பெற வேண்டும் 

தித்திப்போடென்றும் திகள வேண்டும் 
மறதியிலும் உன்னை நினைத்திட வேண்டும் 
காதலுக்குப் பாடம் கற்றுத்தர வேண்டும் 
கலியுகமே வியக்கும் காதலர்களாக வேண்டும் 

Sunday, June 12, 2011

ஈழத்துப் பாலகன்

அன்னை கருவறையில் ஒலி்த்தது
அனியாயக்காரரின் அத்துமீறிய கொலைவெறி 
கருவறையிலும் வேதனையடைந்தேன் 
அன்னைவழி அவலங்களுடன் 


தினமும் கதறியழுவாள் 
தினமும் வெருண்டோடுவாள் 
என்ன நடக்கிறதென்றுபுரியாது 
என் மூச்சைக் கைபிடித்துக் காத்திருந்தேன் 


நான் பிறந்தபோது அம்மாவென்றழைக்கமறந்து 
ஐயோ என்றழுததென்மனம் 
சின்னாபின்னமாகிய உடல்களும் 
சிதறிக்கிடந்த இரத்தங்களுக்கும் நடுவில் 
என் உலகத்து ஜனனம் 


நான் பசியால் அழுதபோது 
பட்டிணியில் கிடந்த என்தாயின் 
மார்பில் தொங்கியும் 
வரமறுத்த பாலுக்காய் கதறிஅழுதேன் 

Saturday, June 11, 2011

காதலில் தடுமாற்றம்


தங்கமே ஏன் தயவு தேடுகிறாய் 
காதலுனை ஆட்சிகொண்டதால் 
மதியை வென்ற உள்ளம் ஆசைகொண்டு
கலங்கமற்ற உன் மனதை தடுமாறச்செய்கிறது

ஏற்றத்தாழ்வுகள் அறிந்திடாத 
காதலின் பணியும் அதுதான் 
சலனமற்ற சங்கடங்களை உருவாக்கி 
சமாதி கட்டிச்சென்றுவிடுகிறது 

அதன்பாதையில் அடியெடுத்து 
அன்பிற்கு அடிபணிந்து 
காதலை வெல்லநினைத்து 
வாழ்வைத் தொலைத்திடத் தடுமாறுகிறாய்

காதலின் வெற்றி நிம்மதியாகாது 
காதலுக்காய் வலிகள் சுமந்து 
உயரிய பாதை விட்டகன்று 
உறவுகளற்ற வாழ்கைதேடி 
காதலினால் தடுமாற்றம் வேண்டியதில்லை

Wednesday, June 8, 2011

உண்மை வைத்தியனுக்குச் சமாதி....

மதிக்கப்படாத திறமைகளும் 
விலைபோகும் கல்விகளுமாய் 
ஏங்கிநிற்கிறது வைத்தியத்துறை
புனிதமங்கு மாசுறுகிறது 

அதிகாரக் கும்பல்கள் 
லட்சங்களும் கோடிகளும் 
கொட்டிக்கொடுத்தேனும் பட்டம் சூடிட
கேடிகளாகவே மாறுகின்றனர் 

முயற்சியும் வைராக்கியமும் மனதிலேந்தி
படிப்படியாய் எட்டுவைத்து 
பாதியில் பறிகொடுத்த உண்மை
வைத்தியர்களின் பரிதாபம் 

சேவைக்குப் புகள் தரும் 
சேய்க்குச் சேவை தரும் 
நோய்க்கு மருந்து தரும் 
நோவுக்கு ஆறுதல் தரும் 
ஆலயங்கள் மறுக்கப்பட்டு 

Sunday, June 5, 2011

விழிகளிங்கு தவமிருக்கிறது

என்னவனே என்னுயிரே
துயில் தேடும் கண்களோடு 
தனிமையின் தவிப்பில் 
விழிகளிங்கு தவமிருக்கிறது 

பஞ்சணையில் தனித்து 
பருவத்தின் வெம்பலில்
மோகத்தின் வேட்கையோடு
 காலத்தை வசைபாடுகிறேன்

என்னெதிரே காட்சிதந்து 
எனக்கென்று வேதமுரைத்து
என்னோடிருந்த நிம்மதியை
காதலனாய் திருடிச்சென்றாயே

Saturday, June 4, 2011

நான் யாரென்று உணரும்போதுகண்முன்னே காணும் காட்சிகள்
கதிகலங்கிடச்செய்கிறது
நேற்று ஹாய் என்று ஹலோ சொன்ன ஓருயிர்
இன்று மதியிழந்ததாய் அறிவிப்பு

ஒரு கணம் ஸ்தம்பிக்கிறது மனம்
இதுதான் வாழ்வென்று.....
ஓராயிரம் அத்தாட்சிகள் கண்டபோதும்
ஆள்வது நானென்று போராடும் மனிதர்கள்

உத்தரவாதமற்ற உயிர்கள் எம்மோடு
உறங்குவதும் விளிப்பதும் நிச்சயமற்றதாகி
இறைவனின் ஏற்பாட்டில்
நாம் அறிந்திடாத நிகழ்வுகள்

Wednesday, June 1, 2011

எம்காதல் உயிர்வாழுமே...

அழகோவியமாய் அமைந்து 
அன்புக்கு நிகரானவளே..
காதலெனும் காந்தவலையில்
சிக்க வைத்துச் சீண்டுபவளே

எனுணர்வில் ஊடறுத்து
உயிரில் கலந்த உன் நினைவுகளை
தினமும் அசைபோடும்
என் இதயம்தான் கனக்கிறது

அரவணைப்பில் அதிமதுரமாய் 
அங்கலாய்ப்புக்கு ஆறுதலாய் 
நித்தமும் நிதர்சனமாய் 
நிம்மதியை நிலைநிறுத்தினாய் 

Related Posts Plugin for WordPress, Blogger...