இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, June 4, 2011

நான் யாரென்று உணரும்போதுகண்முன்னே காணும் காட்சிகள்
கதிகலங்கிடச்செய்கிறது
நேற்று ஹாய் என்று ஹலோ சொன்ன ஓருயிர்
இன்று மதியிழந்ததாய் அறிவிப்பு

ஒரு கணம் ஸ்தம்பிக்கிறது மனம்
இதுதான் வாழ்வென்று.....
ஓராயிரம் அத்தாட்சிகள் கண்டபோதும்
ஆள்வது நானென்று போராடும் மனிதர்கள்

உத்தரவாதமற்ற உயிர்கள் எம்மோடு
உறங்குவதும் விளிப்பதும் நிச்சயமற்றதாகி
இறைவனின் ஏற்பாட்டில்
நாம் அறிந்திடாத நிகழ்வுகள்

சுகங்களை தேடியலைந்த போதும்  
துன்பங்களில் நிலைத்தபோதும் 
நாளை பற்றி அறிந்திராத நாம் 
இன்று நன்மைசெய்திட வேண்டாமா ? 

நலிவுற்ற வாழ்வுகள் கண்டும் 
தற்பெருமை மறக்க வேண்டாமா ?
பேரழிவுகள் நடப்பது கண்டும் 
பேராசை தீர்க்க வேண்டாமா ?

நான் யாரென்று தான் உணரும்போது
நாளையென்று தள்ளிவைத்தலகன்று 
கையிலுள்ள இன்றைக்காய் 
நன்மைசெய்திட உள்ளம்நாடும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

நொடியில் ஒடிந்துவிடும் நீர் குமிழ் போல்தான் வாழ்க்கை...

அசத்தலான கவிதை...

நிலாமதி said...

கவிதை அழகாய் அமைந்து இருக்கிறது பாராட்டுக்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...