இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, June 18, 2011

அன்பே உன் மடிவேண்டும்

அன்பே என்றுமுன் மடிவேண்டும்
அன்புள்ளமுன் துணைவேண்டும்
காதலர்களாய் வாழ்ந்திட வேண்டும்
கானங்கள் பல இசைத்திட வேண்டும்

இன்பங்களுன்னால் அடைந்திட வேண்டும்
இனியொரு உலகம் மறந்திட வேண்டும்
சொந்தங்கள் நாமாய் மாறிட வேண்டும்
சரித்திரமே எம்மால் புகழ்பெற வேண்டும் 

தித்திப்போடென்றும் திகள வேண்டும் 
மறதியிலும் உன்னை நினைத்திட வேண்டும் 
காதலுக்குப் பாடம் கற்றுத்தர வேண்டும் 
கலியுகமே வியக்கும் காதலர்களாக வேண்டும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும்...

கவி அழகன் said...

-- அருமையான கவிதை

Anonymous said...

அன்பே உந்தன் மடிவேண்டும்-உடன்
அன்னையின் அன்பும் தரவேண்டும்
துன்பே இல்லாத் துயில்வேண்டும்-மெகா
தொடராய் இனபம் வரவேண்டும்

உங்கள் எண்ணம் நிறைவேறும்-தேடி
உற்ற துணையை நீர்பாரும்
எங்கள் வாழ்த்தும் தருவோமே-ஏன்
எம்மையும அழைத்தால் வருவோமே

புலவர் சா இராமாநுசம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...