இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, June 1, 2011

எம்காதல் உயிர்வாழுமே...

அழகோவியமாய் அமைந்து 
அன்புக்கு நிகரானவளே..
காதலெனும் காந்தவலையில்
சிக்க வைத்துச் சீண்டுபவளே

எனுணர்வில் ஊடறுத்து
உயிரில் கலந்த உன் நினைவுகளை
தினமும் அசைபோடும்
என் இதயம்தான் கனக்கிறது

அரவணைப்பில் அதிமதுரமாய் 
அங்கலாய்ப்புக்கு ஆறுதலாய் 
நித்தமும் நிதர்சனமாய் 
நிம்மதியை நிலைநிறுத்தினாய் 


எக்காதலையும் வாழவைத்திட 
காதலிக்க நாடியதில்லை 
யுகங்கள் கண்டிராத 
காதலையல்லவா நீயளித்தாய் 

உன்காதல் உயர்வென்று 
உருகிநிற்கும் உண்மைக்காதலிவன் 
எக்காதல் மடிந்தபோதும் 
எம்காதல் உயிர்வாழுமே...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...