இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, September 3, 2012

காலம் பொன்னானது இன்றே செயல்படுவோம்......

அன்புச் சகோதரர்களே........


அரசியல் அட்டகாசங்கள் அங்குமிங்கும் அலை மோதுகின்றது யாரோ ஒருவரின் இருப்பிற்காய் சகோதரனை சகோதரியை வெட்டி வீழ்த்தும் அனாகரீக அரசியல் அத்துமீறல்களாய் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமிருக்கிறது. தேர்தல் காலம் வந்தால் தோழில் கைபோட்டிருந்த உற்ற தோழனையும் எட்டிநின்று பார்த்து ஏழனம் செய்யும் அரசியல் காலமாக மாறியிருக்கிறதை காண்கிறோம். அரசியல் மேடைகள் அசிங்கமான வார்தைகளாலும் வசைகளாலும் கேட்பதற்கு அருவருப்பினைத் தருகிறது. அத்தனையும் ஒரே சமுகம் ஒரே மதம் ஒரே இறைவனை ஒரே நபியை பின்பற்றுகின்ற உத்தம சமுகத்தினை சின்னாபின்னமாக்குகின்ற ஓர் ஆயுதமாய் இன்று அரசியல் மாறியிருப்பதுதான் கவலைக்கிடமானதாக இருக்கின்றது. என் சகோதரனுக்கு நான் கை ஓங்குகின்றேன் என்று ஏன் சிந்திக்க முடியவில்லை அப்படி என்னதான் எமது கண்களை மறைத்திருக்கிறது.....மாற்றுச் சமுகத்தின் அரசியலை ஏன் உங்களால் உற்றுப்பார்க்க முடியவில்லை அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள் அவர்களின் நோக்கம் எங்களுக்கு அபிவிருத்தி வேண்டும் உழைப்பதற்கு வேலை வேண்டும் எங்களுக்கு உயர்பதவிகள் வேண்டும் என்று யாரும் கருதவில்லை அவர்களது சமுகத்தின் நிலையினை ஒன்றுபட்டு உலகுக்கு உணர்த்திடக் காத்திருக்கிறார்கள் நிச்சயமாக பேரின அரசியலோடு ஒட்டியிருக்கின்ற சில ஒட்டுண்ணிகளுக்கும் பாடம் இந்த தேர்தலில் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்பதை ஊர்ந்து ஆராயும் போது காணக்கூடியதாக இருக்கிறது அவர்களுக்கான ஆசனங்களை அவர்கள் இன்றே தீர்மானித்துக்கொண்டார்கள் காட்டிக்கொடுத்தோரும் கூட்டிக்கொடுத்தோரும் இந்த தேர்தலோடு வீடுகளிலும் வெளிநாடுகளிலும் குடியேறுவார்கள்.......இது தவிர எம் சகோதரர்கள் மாத்திரம் ஏன் எமது பலத்தினை உறுதிப்படுத்த முன்வரத் தயங்குகிறார்கள் பேரின அரசியலுக்கு எவ்வளவுதான் ஆதரவினை அளித்தாலும் எமது தனித்துவம் வெளிக்கொணரப்படுவதில்லை அப்பேரின வாத கட்சிகள் வெற்றி பெற்றால் சிறுபான்மை முஸ்லிம்கள் இலங்கையில் இல்லை என்றாகிவிடும் இன்று இருப்பதற்குள் எதனை ஆதரித்தால் எமது தனித்துவம் நிலைநிறுத்தப்படும் என்பதை ஆராயக் கடமைப்பட்டிருக்கிறோம் கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் அம்பாரை சார்ந்த பேரின மக்களின் ஆதரவு அதிகமாக அரசாங்கத்திற்கே இருக்கும் அது தவிர கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களின் வாக்குகளையும் பிரித்தெடுத்தால் நிச்சயமாக பேரினக் கட்சி வெற்றியினைப் பெறும் அவ்வாறு பெற்றாலும் அத்தனை ஆசனங்களும் பேரின மக்களையே சென்றடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை சட்டம்பி அரசியல் வாதிக்கு எந்த பயனும் கிடைக்க வாய்ப்பில்லை......


இணைய வாயிலாக பலரும் பல கருத்துகளை எழுதிய வண்ணமிருக்கின்றனர் அத்தனை கருத்துகளும் ஒட்டுமொத்த எம் சமுகத்தின் எதிர்காலத்தினை நோக்கமாக கொண்டு அமைதல் அவசியமானது எமக்கென தனித்துவம் வேண்டும் எமது உரிமைகள் பேரின சக்திகளுக்கு முன் மண்டியிட்டுக்கிடந்திடக்கூடாது அவர்கள் தரும்போது மாத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையினை முழுவதுமாக அகற்றி எமது பலத்தினை நாம் நிரூபித்து அதன் மூலம் எம் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்கலாம் ஒன்று இரண்டு ஆசனங்களுடன் பெரும் பான்மையின்றி காணப்படும் சந்தர்ப்பங்களில் மற்றவர்களை தாங்கி, நோக்கி நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் இவற்றை தவிர்ப்பதற்கு நிச்சயமாக நாம் எமக்குள் இருக்கின்ற பகைமைகள் மறந்து ஒன்று சேர்ந்தாக வேண்டும் சொற்ப காலமே இருக்கின்ற தறுவாயில் இவற்றை எமது சமுகத்திற்கு உணர்த்த வேண்டிய கடமை எமக்கிருக்கிறது..காலம் பொன்னானது எம் கைகளில் இருக்கும்போதுதான் அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அவற்றை விட்டு கைசேதப்பட்டவர்களாய் பின்னர் சிந்திப்பதில் எமக்கு பயன் கிடைப்பதில்லை முஸ்லிம் என்ற எமக்கு தனித்துவம் வேண்டி ஒன்றுபட்டாக வேண்டிய தருணமிது பேரின கட்சிகளுக்கு ஆதரவளிக்கின்ற சகோதர்கள் சற்று சிந்தியுங்கள் ஒரு தனிப்பட்ட நபர்களின் மீதுள்ள குறைகளை அவர்களின் குற்றங்களை நாம் பெரிதாக பேசிக்கொண்டு எம் சமுகத்திற்கு நாம் துரோகம் செய்தவர்களாய் நாம் மாறக்கூடாது நாளைய சேதத்திற்கு இன்று விதைப்பவர்கள் நாமாகக் கூடாது முடிந்தவரை ஒவ்வொருவரும் தன்னைச்சார்ந்த குடும்பம் நண்பர்களுக்கு இவற்றை உணர்த்துங்கள் அதன் மூலம் எதிர்வருகின்ற 08ம் திகதி எம் சமுகத்தின் தனித்துவத்திற்கு வாக்களித்து எமது ஒற்றுமையினை உலகுக்கு உணர்த்துவோம் முன்வாருங்கள் வெளிநாடுகளில் உள்ள தோழர்களே நீங்கள் உங்கள் உறவுகளோடு பேசும் போது இது பற்றி அவர்களுக்கு விளங்கச்செய்து செயல்பட உதவுங்கள் இறைவன் எமது எதிர்காலத்தினை நல்ல ஒளிமயமானதாக ஆக்கியருள்வானாக... முயற்சிப்போமாக.............

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கருத்துக்கள்... நன்றி...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...