இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, September 29, 2012

முஸ்லிம் காங்கிரஸிக்கு எச்சரிக்கை காத்திருக்கிறது


"பேசினால் பொய் பேசுவான் வாக்களித்தால் மாறுசெய்வான் நம்பினால் துரோகம் செய்வான்”  இது நபி மொழி இது இன்றய கால அரசியல் வாதிகளைப் பார்த்து அன்று நபியவர்கள் கூறியது போல் காட்சிதருகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசியல் வாழ்நாளில் கடந்த 10 - 15 வருட காலப்பகுதியில் பல்வேறு கசப்பான உணர்வுகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கின்ற அப்பாவி மக்களின் நிலை இன்னும் மாறவில்லை மாறுமா என்றும் தெரியவில்லை இதற்கென எம் அரசியல் வாதிகள் என்ன பிரயத்தனம் செய்திருக்கிறார்கள் என்றால் அதிலும் பல கேள்விக் குறிகளைக் கண்டு நிதர்சனமான வாழ்க்கைக்கு வழிதேடிக்கொண்டிருக்கின்ற வாக்காளனாய் நானும் உங்களின் முன்னால்........

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி பல்வேறு பட்ட கருத்துகளும் விமர்சனங்களும் இன்றய இணையத்தளங்களையும் பத்திரிகைகளையும் பக்கம் பக்கமாக எழுதி வார்க்கப்பட்டிருக்கிறது அவற்றுள் மிக முக்கிய கருதுகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சோரம் போய்விட்டார் மக்களின் வாக்குகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் மக்களின் ஆணை அரசுக்கெதிரானது அதனை அரசிடமே அடகுவைத்துவிட்டார் முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று வார்த்தைகளின் மாத்திரம் உரைக்கின்றார் என்றெல்லாம் வசைபாடல்கள் எம் சமுகத்தவர்களாலும் மாற்று சமுகத்தவர்களாலும் விதவிதமான கோணங்களில் எழுதி தீர்க்கப்பட்டுவிட்டது இவைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு முஸ்லிம் சமுகத்தின் பொறுப்புதாரிகளான முஸ்லிம் தலைவர்களின் கைகளில் இருக்கிறது என்பது மறைமுகமான உண்மை இவ்வாறான கேள்விகளுக்கும் இந்த அரசியல் மாயைகளுக்கும் விடைகளை எதிர்காலமே பதில் தரவல்லது என்பதும் உண்மை 

இருந்த போதிலும் கடந்த காலங்களும் இவ்வாறான பல கேள்விகளையும் ஏமாற்று வித்தைகளையும் தாங்கிய அரசியலைத்தான் நாம் கண்டிருக்கிறோம் அனுபவித்திருக்கிறோம் ஒன்றுபட்ட ஒரு மரத்தின் கீழ் இருந்த சமுகம் இன்று சின்னா பின்னமாகி பல கிளைகளாக மாறி சீரழிந்திருப்பதை அனைவரும் அறிவோம் முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை வாதிகள் கூட இன்று சிந்திக்கும் அளவு அரசியலின் தன்மை மாறியிருக்கிறது ஏனென்றால் பொறுமைக்கும் எல்லையுண்டு எத்தனை காலம் பொறுத்திருப்பது என்ற கேள்விக்கு விடைதெரியாத படித்த இளைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தனக்கென ஒரு எதிர்காலம் என்று சிந்திக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அவ்வாறு சிந்தித்தவர்கள்தான் மாற்றுக் கட்சிகள் என்று பிரிந்து சென்று இன்றய நிலையில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரைவாசிக்கு மேல் மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து பேரினவாதக் கட்சிகளின் வெற்றிக்கு வழிவகுத்து நிற்பதை யாரும் அவதானிப்பதாக தெரியவில்லை இந்த நிலைக்கு எது காரணம் என்று ஆராய்ந்தால் தடம்புரளுகின்ற எமது நிலைப்பாடும் ஆழுமையற்ற அரசியலுமே என்பதை இன்றய பாமரன் கூட உணர்ந்து கொள்கிறான் 

இது கடந்த காலத்தினை அடிப்படையாக கொண்டது இந்த நிலை தொடரும் பொழுதுதான் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் என்ற கட்சி இருக்குமா என்ற கேள்வி அனைவரின் மனங்களிலும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது முஸ்லிம் காங்கிரஸினை நம்பி உழைத்திருந்த என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் சொல்லொண்ணாத்துயர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு ஈடேற்றம் இல்லை என்பது அவர்களே அறிந்த உண்மை அதை விட்டு விட்டாலும் இன்னும் முஸ்லிம் காங்கிரசை நம்பி வாழுகின்ற இளைஞர்களையும் குடும்பங்களையுமாவது திருப்த்திப்படுத்தும் நிலைக்கு எதிர்காலத்தில் மாறவில்லை என்றால் இத்தருணத்தில் இக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்பதை எச்சரிக்கையாக கூறிவைக்க விரும்புகிறேன் ஏனென்றால் எல்லாக்காலமும் கொள்கை என்று உரைத்த வாய்கள் இன்று ஏமாற்றப்பட்டிருக்கின்றன மோசடிக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன இவர்களின் பின்னால் எமக்கு எதிர்காலமில்லை என்று சிந்திக்கும் நிலைக்கு கொண்டு விட்டிருக்கிறார்கள் 

ஆகவேதான் இந்த விடயத்தினை இந்தக்காலகட்டத்தில் பதிவு செய்ய நினைத்தேன் இன்று நடந்தேறிய கிழக்கு மாகாண தேர்தல் களம் பற்றி எடுத்து வைக்கப்பட்ட நியாயங்கள் அனியாயங்கள் முடிவுகள் பற்றிய எதிர் வாதங்களுக்கு விடைகளாக எதிர்காலத்தின் அரசியல் நடவெடிக்கைகள் தீர்மானிக்க இருக்கிறது வாக்கு கேட்கின்ற காலத்தில் மாத்திரம் மக்களை நாடி கொள்கையும் கீதமும் பாடிய காலம் மலையேறிவிட்டது இன்றய சிறார்கள் முதல் மூதாட்டிவரை தன்னைப்பற்றி சிந்திக்க துவங்கிவிட்டார்கள் என்ற சிவப்புக் கொடியினை இங்கு அடையாளப்படுத்தியிருக்கிறேன் இந்த கருத்தினூடாக முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று மார்பு தட்டுகின்றவர்ளின் எதிர்கால அரசியலுக்கு ஒரு வாக்காளனாய் நானும் ஒரு கோடு வரைந்திருக்கிறேன் பயணிப்பதும் பாதைமாறுவதும் உங்களின் கைகளில் இருக்கிறது உங்களின் அரசியல் வாழ்வுக்கு ஒவ்வொரு பாமரனும் இட்ட வாக்குகளுக்கு வெகுமானமாய் அவர்களின் வாழ்வுக்கு வழிசெய்யுங்கள் என்றும் வினயமாய் வேண்டிநிற்கிறேன் இறைவன் அனைவருக்கும் அருள் புரிவானாக.  

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...