இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, September 15, 2012

நாளை நமக்காய் உதயமாகட்டும்

பேரினவாதம் பாடியோரும்
வால்பிடித்து வாதங்கள் சேய்தோரும்
உன் எழுச்சிகண்டு வீழ்ந்தனர்
இன்று உன் காலடியில்

வேண்டாம் என்றோருக்கு
வேண்டியதுன் தயவென்று
ஆக்கிவிட்ட இறைவனுக்கே
புகளனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்

ஒற்றுமை எங்கள் பலமென்று
மீண்டும் நிரூபித்த மக்களுக்கே வெற்றியின்று
அற்புதமாய் வெல்லயிருந்ததை
அறியாதோர் சிலரெமது வாக்குகளால்
வெற்றிகண்டு தோற்றோருக்கு
அனுதாபங்கள் ஆறுதலாகட்டும்


பண்டய நாட்கள் இன்றும் மலர்ந்ததாய்
உணருகின்ற எம் சமுகத்தின்
விடியல்களை நோக்கிய உம் பயணம்
வீறுகொண்டு வெற்றிநடை போடட்டும்

யாரது ஆட்சியாயினும் எங்களால்தானென்று
மார்புதட்டும் நிலை தந்த வல்லோனே
மிகப்பெரியவன் வாக்களித்தோருக்கும்
வேண்டியதெல்லாம் சுபீட்சமான இலங்கைதான்

ஆய்ந்து நிற்கும் அத்தனை நிகள்வுகளும்
எம் சமுகத்தின் நாளைய வெற்றிகளுக்கு
ஆரம்பமாய் அமைந்திடட்டும்
நாளை நமக்காய் உதயமாகட்டும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உற்சாகமூட்டும் வரிகள் சார்... வாழ்த்துக்கள்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...