இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, June 30, 2010

உறங்குவாயா மனமே.....


நிலையற்ற சிந்தையுடன்
நிம்மதி தேடி அலையும்
உருவமற்ற ஆட்சியாளனே
உன்னால் உறங்கமுடியாதா?

உடல் என்ற எந்திரத்தின்
இயக்கம் தரும் இயந்திரம்
உன்பாதை மாறினால்
உபாதை உடலைச்சேரும்

உனக்கு அடிமையாகிய
உவமான மனிதம்கள்
உனைச்சொல்லி மாளாது
உலகையும் துறந்தனர்

நண்மையும் நீயாவாய்
தீமையும் நீயாவாய்
அடையும்வரை ஆடுவாய்
பட்டவுடன் தேடுவாய்

உனைத்தாலாட்டி
உனக்கு அறிவளித்து
உன்னை உறங்கச்செய்யாமல்
உலகை வெல்ல முடியாது..

மனம் என்ற மனதை
மளுங்கச்செய்யாது
மதி என்ற வல்லமையுடன்
இவனை வெல் மனிதா....

Tuesday, June 29, 2010

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......




கணவன் என்று
கண்ணியம் காத்தாய்
கலவையின் விளிம்பில்
கைக்குழந்தையும் தந்தாய்

கூட இருந்து கூண்டுக்கிளியாய்
சேர்ந்தே சாவாய் என
சிரித்து மகிழ்ந்த போது
இதோ வருகிறேன் என்று சென்றாய்

உள்ளதைக்கொண்டு
உலகை வெல்ல
உன்னால் முடியாத காரணம் கூறி
நிறுத்திச்சென்றாய் வீதியில்

வருடம ஐந்துதான் கடந்தது
வருவாய் என்றிருந்தேன்
கஸ்டம் மட்டுமே எஞ்சுகிறது என்று
கன்னியருடன் குதூகலிக்கிறாய் அங்கு

குழந்தைகளும் மறந்தாய்
குடுப்பமும் மறந்தாய்
குட்டியும் பெட்டியுமாய்
கும்மாளம் அடிக்கிறாய்

என்னிலை புரியாது உனக்கு
பட்டிணி என்னை வாட்ட
குழந்தையின் எதிர்காலம் திண்டாட
செல்கிறேன்டா வேலைக்கு நானும்

காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
இன்று உன் சல்லாபத்தில் வென்றிருக்கிறாய்
காலனே உனை அழைப்பான்
என்பதை மறந்திருக்கிறாய்.....




Saturday, June 26, 2010

சிவாவுக்காக சில வரிகள்

சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்

ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....

அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்

பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்

தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு

ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு

புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு

இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.

Thursday, June 24, 2010

ரோஜாவின் வாசனையால்...


சிவந்த மலரே...
வழியில் சென்ற நான்
ஈர்க்கும் வாசனையில்
மயங்கிய மதியில்
மீண்டேன் உன்னிடம்

சூட குழல் அற்ற என்னால்
சூடிக் கிடைக்கும் அழகை
பார்த்தே ரசிக்கிறேன்
முகர்ந்து தவிக்கிறேன்

இத்தனை குதூகலத்துடன்
அன்னை மடியில்
தவழும் உன்னை
அணைக்க நாடினேன்
முட்கள் தடுத்தன

உன் இதழில் என் இதழ் பதித்து
என்னாசை தீர்த்திட
முத்தம் ஒன்று கொடுத்து
மொத்தமாய் வாசம் பெற்றேன்
உன் வாசனையின் இளமையால்
பிரிய மனம் மறுக்கிறது

Tuesday, June 22, 2010

பேயென எழுந்த அலையே..
























சினம் கொண்ட சீற்றத்தில்
பேயென எழுந்த அலையே
கொஞ்சம் நில் கதையொன்று கேள்
உன்னை ரசிப்பதற்கே
உனையடைந்த நாட்களதிகம்
உன் அணிவகுத்த நடையும்
உன் சகாக்களின் எழுச்சியும்
பூமியை முத்தமிட்ட காட்சியும்
எங்கள் தடம் அழித்து
நாங்கள் கால் நனைத்து
உன்மேல் விழுந்து
விழையாடிய பொழுதுகளில்
உன் மயக்கத்தில் மனங்குளிர்ந்தது

பேயென எழுந்தாய்
சுனாமியானாய் அடங்காத
ஆட்டம் போட்டு
உன் இருப்பிடம் துறந்து
அழைத்தவர் வருவதுபோல்
ஊருக்குள் நுழைந்தாய்
பல்லாயிரம் உயிர்குடித்தாய்
சேதம் செய்தாய் சீர் கெடுத்தாய்
அழிவில் மீழாத் துயரில்
துடிக்கிறது மனங்கள் இன்றும்

பச்சிளம் பாலர்கள்
உலகை மறந்து
உன் மணல்மேட்டில்
விளையாடியதை பொறுக்காத நீ
இப்படி எழுந்தால்
எப்படித்தாங்குவார்கள் நின்று
என்னை வேண்டுமா தருகிறேன்
பாவம் அவர்களை வாழவிடு
வந்த வழி திரும்பி விடு....

தேனான தேனிலவு..


மனங்கள் பல மனதாற வாழ்த்தி
மட்டிலடங்கா ஆசைகள் பல சுமந்து
மனிதனுக்கே உரிய
மகிழ்ச்சியின் அரங்கேற்றம்.

உணர்வுகள் இறுகி
ஸ்பரிசங்கள் தேடி
இரு உடல்களின் சங்கமம்
இது வாழ்வின் முதல்நிலை

காதலின் கருவான
காமம் தலைசிறக்க
மெதுமெதுவாய் உணர்ந்து
மொத்தமாய் முழுங்கும் நிலை

மூச்சடைக்க முத்தம்பரிமாறி
ஆழம்மட்டும் ஆழ்ந்து
மூழ்கி முத்தெடுத்து
முதன் முதலாய்க்காணும் சுகம்

நம்பிக்கைக்கு காத்திரமான
நல் உறவு கலந்திட
கன்னியாயிருந்து
கன்னி கழித்திடும் கனிவிது

தேனினும் இனியதும்
நிலவினும் பிரகாசமும்
திகட்டாத இன்பமும் ஒருசேர
திழைக்கின்ற தேனான தேனிலவு

அடிமையாகும் ஆசையில்
அலங்கோலம் ஆக்கிடாது
அப்படியே காத்துப் பத்திரமாய்
ஒப்புவிப்பதே பொறுப்பாகும்

Monday, June 21, 2010

சுகம் தரும் சுயம்வரம்...


இளைஞனே.... வாலிபம்
அழைக்கிறது சுகம்தேட
திருடனாய் பதுங்கி
இச்சைக்கு உச்சம் தடுக்கிறாய்

காரணங்கள் பல கூறி
காரியங்கள் பல தடுத்து
காதலையும் தர மறுத்து
கால் வைக்கிறாய் முதுமைக்குள்

திரு திருவென
திடகாத்திரமாய் வளர்ந்து
தீருவாளர் ஆனபின்னும்
திகைத்திருப்பதேனோ...

திருமண பந்தம்
உனக்குத்தரும் பல சொந்தம்
தித்திக்கும் பல இன்பம்
துணை கொண்ட அந்தம்

வித வித ரசம் நாடி
மாசுக்குள் மஞ்சம் தேடுகிறாய்
சிறந்த வளி கையிருந்தும்
சீர் கெட்டு நிற்கின்றாய்

சுகதேகி ஆவதற்கும்
சுகங்கள் பல காண்பதற்கும்
சுயம் வரம் அடைந்திடு
சுற்றமும் சுழலும் உன் பின்னால்

Sunday, June 20, 2010

முகவரி தந்த தந்தை.......


உலகின் முகவரி
தந்த என் தந்தையே
உத்தம புருசர்களுள்
முதலாமவர் நீர்

மகனாய் பிறந்து
பாமகனாய் வளர்ந்து
உம் புகள் பாட
எனக்கொரு திருநாள்
தந்தையர் திருநாள்

எத்துயர் அடைந்தும்
மகன் உலகில் சிறக்க
நீர் கொண்ட வேடம்
மட்டிலடங்கா வேசங்கள்

இப்பாரில் கண்டெடுத்த
ரத்தினமாய் உம்மார்பில் புதைத்து
பாசத்தின் நித்திலமாய்
மிழிரும் உன் அன்பு சிறந்தது

என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்

உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.

Saturday, June 19, 2010

கதிகலங்கும் கல்வியறை..




கதிகலங்குறது நெஞ்சம்
கண்திறந்து பாராயோ
கல்விக் கூடமிது
கற்பது தரையிலமர்ந்து

பிஞ்சு மனங்கள்
கற்கும் கல்வியில்
நஞ்சை விதைப்பது போல்
ஏக்கம் நிறைந்து நிற்கிறது

அடைந்த அவதிகளை
மறக்கும் மனிதர்களாய்
மாறும் மாணவர்களுக்காவது
சேவைத்திறன் செய்தாலென்ன

பார் முழுதும் பரந்து கிடக்கும்
பாசமுள்ள உறவுகளே
மாற்றான் சேவை சேருமுன்
சகோதரன் தேவை எமதாகுமே...

அருங்கல்வி சிந்தைக்கு
குறையின்றி ஏற்றுவதற்கு
மனக்குறை தீர்த்துவிட
மனிதங்களே சிந்தியுங்கள்

Wednesday, June 16, 2010

பொறாமைக்கொடியவன்......

நண்பன் வென்றாலும்
சகோதரன் ஜெயித்தாலும்
பொறுக்குதில்லை மனது
பொறாமை கொண்டமையால்

மனதின் குறுகுறுப்பு
மாறா கடுகடுப்பு
நட்பின் எதிர் துடிப்பு
நாடாத பிணைப்பு

பொல்லாத மனதுக்கு
வகுக்காத வரம்புகளால்
நல்ல குணமும்
நாறித்தான் போகுறது

பாசமும் மறக்கிறது
உறவும் வெறுக்கிறது
பொறாமைக் கொடியவனின்
பொல்லாத செயலில்தான்

Sunday, June 13, 2010

வேண்டாம் வீண்விரயம்





உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
பட்டிணியின் கோரத்தில்
பரிதவிக்கும் மக்களுண்டு

கிடைத்ததை மட்டும் உண்டு
மறு தினத்திற்காய் தேடி அலைந்து
கிட்டியும் கிட்டாத நிலையில்
அவதியுறும் மனிதம் உண்டு

எவ்வுலகம் எப்படியோ
எம்முலகம் இப்படித்தான் என
ஊர் கூடி தின்னும் அளவு
ஒரு தியாலம் படைக்கின்றாய்

ஒரு வயிறு கொள்ளுமளவு
ஒரு பகுதி உண்டுவிட்டு
வறியோர் நிலை மறந்து
கிடங்கிலல்லவா கொட்டுகிறாய்

ஈகையின் சிறப்பு மறந்து
வீண்விரயம் நோக்காகி
சமநிலையும் சாராது
அனியாயம் செய்கின்றாய்

இன்று உணர மறுக்கும்
உமை உணர்த்த
அடிக்கடிஇறைவன்
அவன் வழியில்
இயற்கையளிவுகளுடன்
உன்னை நாடி....

Tuesday, June 8, 2010

ஈகரையின் வாழ்த்தோலை..

பொற்காலமிது
புள்ளரிக்கும் நேரமிது
ஒன்று இரண்டாய்
பல்லாயிரம் கடந்து
பத்தாயிரம் உறவுகள் கண்ட
எம் ஈகரை தாயின்
குதூகல நேரமிது

ஈகரையின் செல்வப்புதல்வன்
சிவாவின் அரவணைப்பில்
பத்தாயிரம் உறவுகள்
கூடிச்சென்றது எமது தாயின்
ஆனந்தக்கண்ணீரின்
சொட்டுக்களில்தான்

ஆணி வேராய் ஊண்றி நின்று
பக்கவேர்களின் பலம் சேர்த்து
இத்தனை விரூட்சமாய்
பார்போற்றும் பக்கங்களாய்
பொக்கிசம் ஆக்கித்தந்தாய்
பாசமுள்ள அண்ணனே
இத்தனை சிறப்பும்
உமது அர்ப்பணிப்பில்

இந்த நிமிடங்களில்
இத் தமிழ் சுரங்கத்தை
வடிகாலமைத்த அத்தனை
ஊளியர்களுக்கும்
புதிய உறவுகள்சேர்ந்து
புதுப்பொலிவுடன்
வாழ்த்துகள் சொரிந்து
எமது இந்த பொற்காலத்தை
போற்றுவோம் வாரீர்

பாலைவனப்பணி.......


பாலைவனம் வெட்டவெளி
கொத்தனாரானதால்
கட்டிடம் அமைக்க
உச்சி வெயிலின்
கோரத்தாண்டவத்தில்
உடலே உருகி
உயிரும் துடிக்க
உஸ்ணக்காற்றின்
ஊசி குற்றலில்
பொறுத்துச் செத்து
போராட்ட வாழ்வுடன்
உயிர்நிலைக்க
உண்ண நினைத்து
கட்டுச்சோற்றை
அக்கரையாய் பிரிக்க
எதிர்பார்க்காத விருந்தினராய்
தூசிக்காற்றும் சோற்றை மறைக்க
வெந்த மனதுடன் வாழ்வை நினைத்து
வெற்று வயிற்றுடன்
வெறும் தண்ணீர் அருந்தி
வாழ்க்கைக்காய்
வாழும் வாழ்க்கை
பாலைவனத்தின் பணி

இந்த நிலை மழுப்பி
இன்னல்கள் சந்தித்து
உறவுகளின் சூபீட்சத்தை
கனவுகளாக்கி......
வாழ்க்கை தேடுகிறான்
பாலைவனத்தில்

Monday, June 7, 2010

தடுமாற்றத்தின் தேடல்..




ஒல்லி உடம்புக்காரி
ஒய்யார நடைநடந்து
ஒரப்பார்வையில்
கிறங்கடித்துச் செல்கிறாள்

கட்டுடல் வாலிபன்
கன்னியவள் பார்வையில்
கதிகலங்கி மதிமயங்கி
தொடர்ந்தவன் அடைந்தான்

பெற்றசுகம் மறக்காதவன்
திகைப்பில் தினமும் நாடி
உலகமே அவளாக
காலடி தவழ்ந்தான்

கரைந்த காலன்
உணர்த்திய வடுவாய்
இவன் ஒல்லியாகி
ஊனநிலையில்
உலகையே வெறுக்கிறான்

பகட்டு என்றும் அழகு என்றும்
இன்பம் அதுதானென்று
விழுந்ததன் விளைவாய்
வியாதியின் பிடியில்
விம்மி அழுகிறான்

நிலை தடுமாறி
நடந்த பாதையில்
நிதானித்திருந்தால்
என்று நினைத்து
மரணத்தை தேடுகிறான்


Saturday, June 5, 2010

வீண் சந்தேகம் விட்டொழி

உயிராய் உறவாடி
ஒருடலாய் கலந்து
ஒருபோர்வையில்
சங்கமமாகி உன்னையே
உலகமாய் கொண்டாலும்
உன் சந்தேகம் தீராததேன்

எதுவானாலும் உனக்காக
எல்லாமே நீயாக
நினைக்கும் என்னை
தடம் புரண்டவன் போல்
நடத்துவதால் தெரிகிறது
சந்தேகிக்கிறாய் என்று

உனக்குத்தெரியாத ஒன்று
சந்தி சிரிக்கிறது
உந்தன் சந்தேக குணத்தாலெம்மை
எனக்குத்தெரிந்த ஒன்று
என்மீது உன் அழவுகடந்த காதல்
சந்தேகம் கொள்ளச் செய்கிறதென்று

வீண் சந்தேகம் விட்டொளி
வீணர் பேச்சை வீசியெறி
நல்லதை நினைத்து நலம்பெறு
சுகமான வாழ்வு நிச்சயம்

கடிகாரம்...



கதைகள் பல பேசும்
காரம் நிறைந்தவன்
ஓட்ட சாதனைக்கு
சொந்தக்காரன்

நிற்காமல் ஒடும் உன்னை
நிறுத்த முனைபவன்
தோற்றுவிடுவான்
ஆதலினால் வெற்றி உன்வழி

இயங்கும் உலகை
இயங்கச்செய்பவன் நீ
யுகங்கள் பல உதிர்ந்து
கடக்கச்செய்தவன் நீ
இயக்க சமனிலைக்கு
இயல்பளிப்பவன் நீ

உன்னை பார்க்காத நொடிகளில்லை
உன்னை நேசிக்காத மனங்களில்லை
பொன்னான நேர்த்தை இழந்தவன்
உன்னை நொந்தழுகிறான்
பரிமாணங்கள் பல கொண்ட உன்னை
பூசிப்பதில் தவறில்லை....

Thursday, June 3, 2010

கலை அண்னைத்தேடி...


தமிழுக்கு உயிர்கொடுக்க
தமிழை சுவாசிக்க
தமிழை யாசிக்க
தமிழுக்காக வாழத்துடிக்கும்
கலைத்தாய் ஈன்ற வேந்தன்

அன்புப்பிணைப்பில்
அரவணைக்கும் எண்ணம்
நட்பின் தேட்டம்
மதிமறந்த வேகம்
அன்பை மட்டும் தேடும்
அழகு தமிழ்மகன்

ஈகரையில் தடம்பதித்து
உமக்கென்று ஒரு தளம் அமைத்து
கருந்தமிழ் பல பேசி
தமிழுக்கே தமிழ் கற்பிக்கும் ஆசான்

உறவுகளின் மனங்களை
பாசத்தால் வசியம் செய்து
கலை மீது கொண்ட காதலால்
அடிக்கடி சண்டை செய்து
உள்ளம் கவர்ந்த கள்வன்


எம் ஈகரைக் குடும்ப குதூகல நிமிடங்களில்
முத்த தமையன் நீ இன்றிய வெற்றிடம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
மனங்கள் உம்மை தேட
உம்வரவின்றி எம் தாயும் அழுகிறாள்


உன்கடின நேரத்தில் இத்தாயையும்
கவனித்துச்செல்லாயோ
உறவு கலந்து உளம் சிறந்து செல்லாயோ...
சுடு சொல்லேனும் சொரிந்து விட்டுச்செல்லாயோ
உன் உடன்பிறவா சோதரனாய்
உன்மை உறவைத்தேடி.......

Tuesday, June 1, 2010

தயங்காமல் கொடு முத்தம்












முத்தம சந்தோசத்தின் மொத்தம்
உணர்ச்சி வெளிப்பாட்டின்
உச்ச நிலையும் முத்தமே
துக்க நிலையின் ஆறுதலும் முத்தமே

குழந்தையை வாரியணைத்து
கொடுக்கின்ற பாச முத்தம்
துணை கட்டி அணைத்து
கொடுக்கின்ற இன்ப முத்தம்
எட்டி நின்று உச்சிமோந்து
உளமாற கொடுக்கின்ற
உறவு முத்தம்

நீண்ட இடைவெளியில்
சேர்ந்தவுடனும் முத்தம்
உறவு கலந்து பிரிந்து செல்லும்
பிரிவுக்கும் முத்தம்

ஆணைவிட பெண்விரும்பும்
அன்பு முத்தம்
ஏக்கம் தீர எப்பொழுதும்
கொடுக்கும் ஆசை முத்தம்

முத்தப்பரிமாண பரிமாற்றம்
மொத்தமாய் கலந்த வாழ்வில்
திகட்டாமல் தினமும்
தயங்காமல் கொடுத்திடு
முத்தம் மொத்தமாய்






Related Posts Plugin for WordPress, Blogger...