இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, June 16, 2010

பொறாமைக்கொடியவன்......

நண்பன் வென்றாலும்
சகோதரன் ஜெயித்தாலும்
பொறுக்குதில்லை மனது
பொறாமை கொண்டமையால்

மனதின் குறுகுறுப்பு
மாறா கடுகடுப்பு
நட்பின் எதிர் துடிப்பு
நாடாத பிணைப்பு

பொல்லாத மனதுக்கு
வகுக்காத வரம்புகளால்
நல்ல குணமும்
நாறித்தான் போகுறது

பாசமும் மறக்கிறது
உறவும் வெறுக்கிறது
பொறாமைக் கொடியவனின்
பொல்லாத செயலில்தான்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

தஞ்சை.வாசன் said...

மனிதர்கள் இதயத்தில் புகுந்திடக்கூடாத ஆமைகளில் ஒன்றான பொறாமை பற்றிய வரிகள் அருமை...

(உங்களை பார்க்கும் சமயம் என் மனதிற்குள் பொறாமையாய்...)

நேசமுடன் ஹாசிம் said...

என் நன்பன் பொறாமைப்பட்டால் அதில் அர்த்தமிருக்கும் உங்கள் பொறாமையை காதலிப்பவன் நான்
மிக்க நன்றி நண்பா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...