இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, July 31, 2010

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!

அன்னை கருவில்
அழகான வாழ்வு
அகிலம் கண்டும்
ஆனந்தம் கொண்டு

மனிதப்பிறவியாய்
மண்ணில் ஆர்ப்பரித்து
மனிதனாய் வாழ
மறுக்கின்ற உலகம்

செய்த பிழை எதுவென்று
சொல்லாது தளம்பறித்து
சிசுவாய் இருந்தாலும்
சிதைத்து சுகம் கண்டு

ஓடு மட்டும் துரத்தி
ஓட்டாண்டியாக்கி
ஒய்யாரமாய் படம் போட்டு
ஒப்பாரியில் வாழ்கிறார்கள்

எல்லார் வாழ்விலும்
எட்டப்பர்களாய்
எட்டி உதைத்து
எரித்துப் போட்ட சுதந்திரம்

அங்குமிங்குமாய்
அலைமோதும் அகதியாய்
அல்லல் படுத்தும்
அறிவு கெட்ட உலகம்

சுதந்திரம் என்ற சுவாசம்
அடைந்து பெற்றவர்களும்
அதனை அளிக்க மறுத்த
ஆட்சியாளர்களாய்....

மரத்துப்போன வாழ்வுடன்
மடிந்தொழிந்து போகுமுன்
மனிதன் என்றாவது
மறதியிலாவது நினைப்பார்களா?

இருக்குமட்டும் இருந்து
இறுதி மூச்சு வரை
சுதந்திரமாய் மூச்சுவிட
சுதந்திரம்தான் தருவார்களா?

ஈகரைத்தளத்தின் போட்டிக்காக எழுதிய கவிதை

Wednesday, July 28, 2010

காமுகக் காதலன்...

காதலை மட்டும் ஆயுதமாக்கி
காணுகின்ற பெண்களையெல்லாம்
காமக் கழியாட்டத்திற்காக
காது குத்த நாடுகிறாய்...

மலர்விட்டு மலர் தாவும் வண்டாய்
மங்கையர் மனங்கவர்ந்து
மட்டற்ற மகிழ்ச்சியும் அதில் கண்டு
மதி கெட்ட வழியில் தொடர்கிறாய்

கன்னி அவளின்
கருணை உள்ளம் மயங்கிட
கதிரவனாய் காட்சிதந்து
கண்ணனாய் நீயும் மாறுகிறாய்

உன்தேவை தீருமட்டும்
உத்தமனாய் ஒப்புவித்து
உறிஞ்சி நீயும் அருந்திவிட்டு
உத்தரவு பெறுகிறாய்

உத்தமியான பெண்ணவளும்
உணராத திருவிழையாடலில்
உழைச்சலையும் தான்பெற்று
உயிரையும் விடுகிறாள்

எதுவும் அறியாப்பாலகனாய்
எட்டி நின்று முகம் நிறுத்தி
எங்கு இருக்கிறாள் இன்னொருவள்
என்றல்லவா தேடுகிறாய்

காமம் உன் கண்ணை மறைக்க
காதலுக்கு துரோகம் செய்து
காமுகனாய் வலம்வரும்
காடயனாம் நீ அல்லவா

Tuesday, July 27, 2010

துரோகியாகிய நான்..

உன் உயிராய் கலந்த நான்
உறவில் மலர்ந்த நான்
உடலில் ஊர்ந்த நான்
உணர்வில் பிணைந்த நான்

காதலில் திழைத்திருந்தும்
காலமெல்லாம் உடனிருந்தும்
காத்திரமான உறவிருந்தும்
காவுகொள்ள நாடுகிறாய்

நீரோடையில் தடங்களாயினும்
நீ அறிந்திருக்க நாடி
நீதியின் பொருட்டால்
நீ அறியச் செய்தவன் நான்

நான் கொண்ட ஓர் நட்பை
நான் முனைந்து ஒப்புவிக்க
நாள் தோறும் அதைச்சொல்லி
நானே குற்றவாளி என்கிறாய்

துரோகம் செய்ய நினைத்திருந்தால்
துல்லிய வழி பல இருந்தும்
தூயவனாய் திகழ்ந்திட
துரோகி என நினைக்கலாமா?

உனக்காக வாழ்ந்திருந்து
உன் மடியில் மடிந்துவிட
உற்ற நட்பை இழந்திருக்கும்
உளமற்ற துரோகி நான்

Monday, July 26, 2010

வாடகைத்தாய்.....

தாய் என்று கூவியும் கேட்காமல்
தா என்று எடுத்துச்சென்ற சேயை
தாலாட்டுகிறாள் வலி உணராத்தாய்
தாங்க மாட்டாமல் தவிக்கிறது உள்ளம்

வறுமை வயிற்றில் அடிக்க
வறிய புத்தியின் சொல் கேட்டு
வகுத்த நிபந்தனையில்
வலியோடு விழி தத்தளிக்கிறது

பத்து மாதங்கள் பத்திரமாய்காத்து
பஞ்சணை தர மறுத்து
பரிதாபமாய் பாலகனை
பறித்துச்செல்கின்ற வாழ்விது

தாயாய் இருந்தும் இல்லாத
தாய்மை உரிமையினை
தானாக இழந்து தவிக்கும்
தாரமற்ற வாடகைத்தாய்

நான் பெற்ற செல்வம்
நான் மறுத்த தாய் உரிமையுடன்
நான் இழந்த சேய்ப்பாசத்திற்கு
நானே பொறுப்பாளி

கொடுமையிலும் கொடுமையிது
கொதிக்கின்ற உணர்விது
பஞ்சத்தில் மடிந்திடினும்
பாவம் இச்செயல் வேண்டாமே...

Sunday, July 25, 2010

உலவுகின்ற ஓர் உயிர்...





பெண் என்று பின்னின்று
பெருமை கண்டு பரிதவித்து
தேலித்த மனம் ஆதரவு நாடி
பேறு காணா பரிதாபம்

துணையாய் என்றும் தொடர்வாளென்று
துயரம் துடைத்தும் விடுவாளென்று
துக்கம் மறந்து தஞ்சம் கொண்டு
துயில் கொண்ட மனிதன் இங்கே

பித்துப்பிடிக்க காரணமாய் இருந்து
பித்தனாய் மற்றி விட்டு
வீதியில் அலைய விதியாய் மாறி
வீழ்த்தினாள் வாழ்வைத்துறந்து

பைத்தியம் என்று பலரும் கூற
வைத்தியம் அற்ற நிலைக்கு மாறி
மைதிலியே என்று தினமும் கூறி
மையம் கொண்ட ஒரு உள்ளம்

வாழும் வரை வாழ்வைத்தேடி
மரணம்வரை மடிய நாடி
உணர்வுகளை மறந்த உயிராய்
உலவுகின்ற ஒர் உயிர்.....

Thursday, July 22, 2010

இரு நட்பின் பிரிவுக்காக...

நாடுகடந்த வாழ்வில்
நாட்களின் தவிப்பு மறக்க
நண்பனின் அன்பில்
நாட்களை மறந்திருக்க

அதிகரித்த உறவில்
அன்புப்பிணைப்பில் திழைத்து
அதிகம் உறவாடிவிட்டு
அறுந்து விட்ட நட்பை நோக்கி

உறவுகளற்ற வாழ்விது
உழைச்சலதிகம் நிறைந்தது
உணர்வுகள் பகிர்ந்திட
உயிராய் நண்பன் மட்டுமே

அனைத்தும் பகிர்ந்ததால்
அதிலொரு பாசம் கண்டு
அருஞ்சொற்களும் நஞ்சாய் மாறிட
அரிய நட்பும் எதிரியாகிட

வேண்டுமெனற நோக்கமற்று
வேறுவழி தேட மறந்து
வேற்றுமையும் தொடர
வேல் பாய்ச்சுவது போலாகி

உயிர்நண்பனாய் திகழ
உற்றவழிதானிருக்க
உமிழ்ந்து வி்ட்ட வார்தைக்காய்
உறவு துறக்கலாகாது

தோழர்களான என் நண்பர்களே...
தோழமையின்றிய வாழ்வில்
தோல்விகளதிகமடா...உனை
தோள்மீதும் தாங்குவது உற்ற நண்பனடா..

தவறுக்கு பரிகாரமாய்
தயவுடன் மன்னித்து
தற்பெருமை காட்டாது
தலைசிறந்திடுங்கள் நட்பினில்

Monday, July 19, 2010

ஒரு துளி கண்ணீரில்....(150 வது சிதறல்)











உன் ஒற்றைக் கண்ணில்
உதிருகின்ற ஒரு துளிக் கண்ணீரில்
உதிரம் கொதிக்கிறது கண்ணே
உறங்க மறுக்கிறது என் கண்கள்

உயிராய் நானிருந்தும்
உடலை அகன்றிருக்க
உணர்வாய் நானிருந்தும்
உறவு துறந்திருக்க

என்மார்பில் முகம்பதித்து
எப்பொழுதும் துயர்நீத்தாய்
எட்டிநின்ற காரணத்தால்
எதற்காக கண்ணீர் வடிக்கிறாய்

தாலாட்டுப் பாடுகின்ற
தாயாக நான் மாறி
தாயவள் உனை நான்
தாங்கத்தான் மாட்டேனா

துடைத்துவிடு இப்பொழுது
துயரம்தான் மறந்துவிடு
துயில் கொண்டேனும்
துரத்திவிடு சோகங்களை

என்னுயிரே அழாதே
என்னிதயம் கலங்குதடி
எதார்த்தமான நாள் வந்து
எம் நிலை மாற்றுமடி....

Sunday, July 18, 2010

வறுமை கொடியது...











அந்தோ பரிதாபம்

பட்டிணியின் கோரப்பிடியில்
சிக்கிய மனிதம் கண்டு
பருந்து கூட
எட்டி நின்று பார்க்கிறது
உன்னை தினபதால்
எனக்கேது பலன் என்று

மனிதப்பிறவியாய்
மார்தட்டும் மானிடம்
அவதியில் அல்லலுறும்
மனிதம் காக்க வேண்டாமா?

வாழ்கை அரியது
வறுமை கொடியது
வாழுமட்டும் வாழவிட
வாழ்வோரை வாழவைப்போம்.

Saturday, July 17, 2010

வருக றமழானே வருக...



வருக...வருக....

றமழானே வருக..

மாதங்களின் சிறந்தவனே..

மாசுகள் தீர்ப்பவனே

றகுமத்தை அழிப்பவனே

பக்தியில் மிகுந்தவனே

நன்மைகள் நிறைந்தவனே

சுவர்க்த்தின் வழிகாட்டியே.

வருக றமழானே வருக.


பசிக்க வைத்து

ஏழையின் பசி அறிவித்தவனே

தாகிக்க வைத்து

நீரின் மேட்சி காட்டியவனே

ஈகைக்கு வழிவகுத்து
செல்வந்தர்களை சிறந்த
செல்வந்தனாக்கியவனே..

கடமைகள் ஓரிறைக்கென
உணரச்செய்தவனே..

வருக றமழானே வருக..


உன்வருகையால்
குதூகலம் முஃமீனுக்கு

சாட்டையடி செய்த்தானுக்கு

பூட்டப்பட்ட நரகம்

திறக்கப்பட்ட சுவர்கம்

ஆதலால் வருக

உன் வருகையில்

நலம்பெற வருக

உன் வரவு நல்வரவாகட்டும்

Friday, July 16, 2010

தூரத்தில் இருந்து தூது மட்டும்











ஈழத்து உயிர்கள் சில
ஈழத்துயர் துறந்து
உயிர்களை மட்டும் கையிலெடுத்து
ஈழ தேசம் விட்டகல

துரதிஸ்டம் விடாமல் துரத்தி
மற்றுமொரு தேசம் சிறைபிடிக்க
விசாரணை எனும் பெயரில்
விபரம் தேடி வஞ்சிக்க

நாட்களும் கடந்து
வருடமும் கடந்தும்
அப்பாவிகள் என்று தெரிந்தும்
அடிமையாக்கியது அத்தேசம்

கண்முன்னே காட்சிகளும்
கதிகலங்கும் நிகழ்வுகளும்
அவதியுறுகிறது தமிழினம்
பராமுகத்தில் தமிழ்த்தேசம்

அத்தனையும் குரல் கொடுக்கும்
அகிலத்தின் தமிழினமே
உயிராவது திறக்க வழியற்று
உயிர் மாய்க்கிறது உறவுகள்

உடனிருக்கும் நிகழ்வுகளுள்
இதுவும் ஒன்றுதானே...
ஒத்திசைத்து உரத்துக்கூறி
இதற்கு விடை காணலாமே..

மலேசிய தேச தமிழர்களே
ஒன்று பட மாட்டீரோ..
தூரத்தில் இருப்பதால்
தூதுவிட மட்டும் முடிகிறது....

Thursday, July 15, 2010

சுகமிருக்க சுகம்தேடுகிறாய்..

சுந்தரப் புருசராய்
சுழலுகின்ற இப்பூமியில்
சுகங்கள் தேடி
சுற்றுகின்ற மனிதா..

உன்னில் திருப்தியுடன்
உறவுகள் பேணிவிட்டால்
உலக வீட்டினில்
உத்தம சுகம் தானடா

வளரந்த மகனாய்
வளர்த்து விட்ட பெற்றோரை
வளர்த்தெடுக்கும் குழந்தைகளாய்
வழுவாது நோக்குவதும் சுகமடா

கட்டிய துணையின்
கண்ணீர் துடைத்தெறிந்து
கண்களாய் நோக்குவதும்
கற்றறிந்த சுகமடா

பெற்ற குழந்தைக்கு
பெருவாழ்வு உகந்தழித்து
பெற்ற கடன் தீர்த்து விடு
பெற்றிடுவாய் சுகமதிகம்

தேடி விட்ட செல்வத்தை
தேவை தீர்ப்பதுடன்
தேடலுடையோருக்கு வழங்கிடு
தேடும் நிம்மதி கண்டுடுவாய்

உன்னைச்சுற்றி சுகமிருக்க
உலகெல்லாம் சுகம்தேடி
உவப்பற்ற உழைச்சலை
உடலுக்குத்தருவதேன்...

Wednesday, July 14, 2010

காதலில் உயிரானாய்....












அன்பே உனைக்காணும் வரை
அடக்கிவைத்த உணர்வுகள்
அத்தனை வீர்கொண்டெழ
அதிசயித்த நிகழ்வென்ன

காதல் என்றறியா வாலிபனாய்
காலமெல்லாம் கவலையில்லாமல்
காதோர சில்மிசங்களை
காணாத சிறியவனாய் இருந்தேனே

கன்னி உன் கண்களில்
கதிரவன் ஒளி மங்கும்
காதல் பார்வை வீசிட
கால்தடமாற வைத்தாயே...

கமகமக்கிறது காதல் வசந்தம்
கருவுற்றது காதலரும்பு
சிலிர்க்கிறது தேகம் உன்தரிசன
சிற்றின்பம் தேடுகிறேன்

காதலனாய் கவிழ்ந்து விட்டதால்
காகிதங்களுடன் கதைகள்பேசி
இன்பலோகம் திறந்திருக்க
இதிகாசம் காண்கிறேன்.

இனி என் மூச்சில் சுவாசமாய்
இனி என் பேச்சில் மொழிகளாய்
இனி என் உயிரின் நாதமாய்
இனிஉன்தன் நிழலாவேன்.

Tuesday, July 13, 2010

குடிகெடுக்கும் குடி...

குடியைக்கெடுக்கும் குடியினால்
குலம் காக்கும் பெண்ணொருத்தி
குறிப்பெழுத வழி செய்து
குற்றுயிராய் கிடக்கிறாள்

வேண்டாத மதுரசம்
வேண்டும் என்றே அருந்திவிட்டு
வேதம் மறந்த மாதுவாய்
வேகிறாள் மனம் நொந்து

அன்னிய கலாச்சாரத்தில்
அதிக ஆர்வாரத்துடன் நடக்கிறது
அமைதியாக அருந்திவிட்டு
ஆரவாரம் எம் குடியர்களால்


உழைப்பில் குறைவைத்து
ஊதியம் நழுவவிட்டு
குடும்ப நலம் நோக்காது
குடிப்பது மட்டும் தொழிலாக

காசுக்காய் எதுவும் செய்து
தன்னை உயிரோடு புதைப்பதுபோல்
தாலியையும் அடகுவைத்து
குடிப்பதில் மட்டும் சுகம்காண

தன்பிள்ளை எதிர்காலம்
தன்னலத்தில் கவலையில்லாது
தூவென்று ஊரார் தூற்ற
குடித்து விட்டு குப்புறக்கிடக்கிறாய்

போதையின் மயக்கத்தில்
போன இடம் தெரியாமல்
உன்னைத்துலைத்து உலகம்மறந்து
உருமாறுகிறாய் மனிதமில்லாமல்.


Monday, July 12, 2010

வீதியே விதியாவதா?..












அனாதரவாய் கைவிட்டதில்
அகம் அழுகின்ற குறைபாடாய்
அல்லலுறும் பிஞ்சுகளின்
அவலம் தீர்ப்பாருண்டா

கண்களில் ஏக்கத்துடன்
கவலையின் உச்சத்தில்
கதிகலங்கும் இன்னிலையினை
கருணையுள்ளம் நோக்கவில்லை

வீதியை வீடாக்கி
மடியினை மெத்தையாக்கி
கவலையற்ற மறு உறவை
உறங்கிட செய்த செல்லக்குணம்

பெற்றவரை நோவதா
பிறந்த உலகை நோவதா என
பிற்காலம் வெல்வதற்காய்
நீந்துகின்ற பாலகன்

இதுபோன்ற செல்வங்களால்
இவ்வையகம் நிறைந்துவிட
சொல்பவனும் செய்யாது
செய்பவனுக்கு வழி செய்யாது
விரண்டோடுகின்ற சமூகம்

விதியின் விளையாட்டில்
வீதியியே விதி என்று
வெந்தழுகின்ற மழலைகளை
வேரோடு அறுத்தெறிய வேண்டாமா?

Sunday, July 11, 2010

கைத்தொலை பேசி.....

அருகில் இருக்கிறாய்
அன்பைத்தருகிறாய்
அசர வைக்கிறாய்
அகம் வெல்கிறாய்

நொடிப்பொழுதில்
நொந்த விடயங்களையும்
மகிழ்வுறும் நிமிடங்களையும்
பரிமாறிடச்செய்கிறாய்

காதல் என்று கூறி
தொலைவில் இருந்து
தொக்கி நின்றவளை
கொக்கி போட வைக்கிறாய்

முத்தம் அவளுக்கென்று
நித்தம் நீ பெற்று
சத்தம் மட்டும் அவளுக்காக
சலனமின்றித் தருகிறாய்

Saturday, July 10, 2010

உயிர்காக்க.. உண்ணாநிலை...



உண்ணா நிலை இருந்து
உலகின் கண்கசக்கி
உயிரை வதை செய்து
உருவாக்க நினைப்பதென்ன

உலகம் அறிந்த
உயிர் குடித்தலை
உளவு பார்க்க நாடும்
உதவும் கரங்களை கட்டுவதற்கா

உத்தமர்கள் என்று
உளமாற நாடிய
உன்மத்தர்களையும்
உலகறிய நசித்த கதையினை மறுப்பதற்கா

உணர்வுகளுடன் சிந்தித்துப்பார்
உற்ற தோழன் என்றுபார்
உதவ நீ நின்று
உயிர்காப்பாய் முன்னின்று

உணவுமறுப்பதாய் காட்டி
உண்மை நிலை மறுத்து
உந்துதல் தீமைக்காக
உத்தரவு தருவதில் சாதிப்பாயா?

உலகை படைத்த இறைவனின்
உச்சமான தீர்ப்பில்
உன்னைத் தப்பிக்க நினைத்து
உயிரை பணயம் வைக்கிறாய்.
உணருவாயா உளம்மாறுவாயா?

Thursday, July 8, 2010

லஞ்சம் எனும் லட்சணமற்றகாசு...









அடுத்தவன் பணமென்றும்
அல்லலுடையவன் பணமென்றும்
அசிங்கமான முறைஎன்றும்
அறிந்திருந்தும் பெறுகிறாய்

செல்வம் சேர்க்கும் ஆசையில்
செளிப்பற்ற வழிதேடி
செம்மொழிகள் மறந்து
செல்லாக்காசாகிறாய்

ஆசைக்கு அடிபணிந்து
ஆற்றாமையில் பெறுகிறாய்
ஆற்றல்களை முடக்கி
ஆதரவு தர மறுக்கிறாய்

லஞ்சம் என்றுரைக்கும்
லட்சணமில்லா இப்பணத்தால்
லட்சியங்கள் இழந்து
லயித்துக்கிடப்பதேனோ..

கூடாத முறைதனில்
கூட்டியள்ளும் பணங்களால்
குடும்பத்தில் நிகளும்
குறை ஒன்றால் அழிந்திடுவாய்

படித்தவன் நீ என்று
பாமரன் உனை நாட
பக்குவம் மறந்து நீயும்
பரிதவிக்க ஏன் விடுகிறாய்

நீர் கற்ற கல்விக்கும்
நீர் பெற்ற தொழிலுக்கும்
நீர் பெறும் ஊதியத்தில்
நிம்மதி காண வேண்டாமா?

மறுவாழ்வு மலருமா?







என்னுலகம் குறுகியது
என்னருமை புரிகிறது
என்னாழும் வலம் வருகை
எப்போது மறுவுலகம்

வயிற்றின் உள்ளேயே...
வெகுவாக வளர்ந்த நானும்
வேறு வழி இல்லாமல்
வலி கொடுத்து சுமைதீர்க்க
காத்திருக்கிறேன்..

உன் வயிற்றுச் சுவர்களில்
உரிமையுடன் உதைக்கிறேன்
உணர்வுகளுடன் மகிழ்கிறாயா? இல்லை
உளம் நொந்து வேகுறாயா?

எட்டி நின்று காணும்
எத்துயரும் அறியாத் தந்தை
எள்ளளவும் நோகாமல்
என்னளவில் மகிழ்கிறார்

எதார்த்தமான இன்னிகழ்வில்
இறைவனின் கருணையுடன்
என்நிலையும் உன்நிலையும் மாறா
மறுவாழ்வு மலருமா? அம்மா

Wednesday, July 7, 2010

வெள்ளை நிறமொன்று...








வெள்ளை நிறமென்று
வெற்று மனமென்று
வெல்லம் நீ தந்து
வென்றாய் நீ நின்று

பூவான மனமொன்றை
பூரிப்பும் உண்டாக்கி
பூக்கவும் நீ செய்து
பூவாக ஏந்தி நின்றாய்

காதல் மலரென்று
கனிவாய்தான் மலர
கற்கண்டாய் தினமும்
இனித்தது நன்று

கார் சூழல் தான் மிளிர
கருமை உணர்வுகளுடன்
கதகதப்பில் கவிழ்ந்து
கறுப்பு நிறமற்ற கருமையாகினாய்

வெள்ளை என்று மட்டும்
வெகுநாளாய்த் தொடர்நததில்
கறுப்பு மலரொன்றை
கண்ணியமாய் சூடிச்சென்றாய்.

Tuesday, July 6, 2010

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரி...


பாசமான அக்காவின்
பரிவான வரிகளில்
பாவலர்கள் மயங்கிட
பாவெழுதிய புலவர்மணி

அழகான கவிதைகளுடன்
அன்பான உரையிட்டு
அறிவுரையும் பல தந்து
ஆதரித்த அன்புள்ளம்

எதிர்பாரா இறை பரீட்சையில்
ஏங்கும் இன்நாட்களில்
எழிய மனமும்
ஏக்கங்கள் நிறைந்திடவே..

உறவுகள் பல
உலக நடப்பை விவரித்து
உரிமையுடன் கைகோர்த்து
உடனிருப்பதில் ஆறுதல்

கவலை விட்டகலா
கணப் பொழுதுகளில்
காரண நிறைவுக்கு துஆவுடன்
காத்திருக்கும் அன்பு உறவுகள்

அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள்

அதிகம் நோகாது
அதற்கான வழிகளில்
அடி எடுத்து வைத்திட்டால்
அவற்றை உடன் வென்றிடலாம்

ஈகரை உறவுகளுடன்
உம் மன ஆறுதலுக்காக
ஒன்று கூடி பிரார்த்திக்கிறோம்
அத்தனையும் மறந்து
கலந்து நீயும் செல்வாயோ....

Monday, July 5, 2010

வரைவுதந்த சித்திரம்...
























கலைக்கு நிகர்
கலையென
கற்சிலைபோல் வரைந்த
கற்பகச்சிலை அழகை
கனிவுடன் வரைந்தீரோ..
எத்தனை கொள்ளை அழகு
எச்சம் அற்ற வடிவமெடுத்து
எழிலாக வண்ணம் அமைத்து
எழிலரசியின் தோற்றம் கொடுத்தீர்
கண்கொள்ளாக் காட்சியாக
கண்ட கண்களைக் கவர்ந்ததால்
வரைந்த கைக்கு மோதிரமிட
வரைவுக்கு நிகர்கொடுத்த
சிந்தைக்கு சிலைஎடுக்க
வரிகள் கொண்டு மட்டும்
வர்ணிக்க முடிந்த
அற்புதச் சித்திரம்
உம் கலைக்கு என் சமர்ப்பணம்

Sunday, July 4, 2010

உனைநினைத்து உயிரெழுத்து

ன்பின் உறைவிடமாய்
ழகின் நித்திலமாய்
த்தனை வித்தகமும்
டங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே

சை அத்தனையும்
றப் பகிர்ந்தளித்து
ற்றல் மிக்கதொரு
ரம்பம் எனக்களித்தாய்

ன்பம் இதுதான் என
னிதாய் ஊட்டிவிட்டு
ன்பலோகம் காண
ருந்தாய் எப்பொழுதும்

ன்ற செல்வமாய்
ருலகிலும் சிறந்திட
ர்ப்புடன் சேர்ந்திசைத்து
கை கொண்டிருந்தாய்

வமானம் அற்றதால்
ன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
ணர்வுகள் இறுகியதால்
யிராய் நீயும் திகழ்கிறாய்

ருலகம் கவலையில்லை
மை உள்ளம் நோக்கவில்லை
ணுறக்கம் மறந்து
ஞ்சலாடுகிறது என்னுள்ளம்

த்திசையில் நானிருந்தும்
ப்பொழுதும் உனைநினைத்து
ள்ளளவும் மறக்காத
ன்நிலைதான் உணர்வாயோ..

ஞ்சலானவளே என்
க்க நிலை மறக்க
ற்றம் கொண்ட நானும்
ட்டினில் மட்டும் எழுதுகிறேன்

ந்தேழு மாதங்கள்
க்கியமாய் இருந்துவிட்டு
யா தயவின்றி
யோ என்றிருக்கிறாய்

வ்வெரு நொடிகளும்
வ்வாமல் விட்டகல
ன்றாய் இணையும் வரை
ரு கணம் தேடுகிறாய்

டுகிறது நாட்கள்
டிய உணர்வுகளை
டிப்பிடித்து உனக்காக
டோடி வருகிறேன் கண்ணே..

என்னுயிர் நீயாவதால்
என் டதமும் நீயாவாய்
வை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....



Saturday, July 3, 2010

ஏற்றம் கொண்ட நட்பு .....


உறவுகள் பல கண்டு
உள்ளம் நிறைந்திருந்தும்
நட்பு எனும் உறவில்
நலிவுறாத எண்ணங்கள்

தாய் தந்தை சகோதரம்
சேய் என்ற உறவில்
தன்தேவை நிறைவுக்கு
எதிர்பார்க்கும் மனங்களுண்டு

தாரம் குழந்தை என்போரும்
கணவன் தகப்பன் என்றாகி
காப்பீடு இவனாலே
என்கின்ற நிலை உண்டு

ஆணென்றோ பெண்ணென்றோ
ஏழ்மையென்றோ வசதியென்றோ
உயர்வென்றோ தாழ்வென்றோ
பார்க்காத உறவு நட்பண்றோ..

உயிர் காப்பான் தோழன்
உயிர் கொடுப்பான் தோழன்
உசிதமான நிமிடங்களில்
உடனிருப்பான் உன்னத நட்புடன்

நட்பு என்ற உருவத்தில்
நோக்காத எதிர்பார்ப்புடன்
பரிமாற்றம் கொள்கின்ற
உறவுப்பிணைப்பி்ல்
உலகமே மறந்திடலாம்

எல்லாமே அழிந்திடலாம்
எத்திசையும் சென்றிடலாம்
ஏற்றம் கொண்ட நட்பு
என்றுமே அழிந்திடாது




Related Posts Plugin for WordPress, Blogger...