இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, July 19, 2010

ஒரு துளி கண்ணீரில்....(150 வது சிதறல்)உன் ஒற்றைக் கண்ணில்
உதிருகின்ற ஒரு துளிக் கண்ணீரில்
உதிரம் கொதிக்கிறது கண்ணே
உறங்க மறுக்கிறது என் கண்கள்

உயிராய் நானிருந்தும்
உடலை அகன்றிருக்க
உணர்வாய் நானிருந்தும்
உறவு துறந்திருக்க

என்மார்பில் முகம்பதித்து
எப்பொழுதும் துயர்நீத்தாய்
எட்டிநின்ற காரணத்தால்
எதற்காக கண்ணீர் வடிக்கிறாய்

தாலாட்டுப் பாடுகின்ற
தாயாக நான் மாறி
தாயவள் உனை நான்
தாங்கத்தான் மாட்டேனா

துடைத்துவிடு இப்பொழுது
துயரம்தான் மறந்துவிடு
துயில் கொண்டேனும்
துரத்திவிடு சோகங்களை

என்னுயிரே அழாதே
என்னிதயம் கலங்குதடி
எதார்த்தமான நாள் வந்து
எம் நிலை மாற்றுமடி....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

தஞ்சை.வாசன் said...

மனதின் உணர்வுகள் அழகிய வடிவில் வெளிபாடாய் இங்கே கவிதையாய்...

அந்நாள் மிகவிரைவில் நிகழ இறைவனை வேண்டுகின்றேன்... ஒன்றாய் உறவுகளோடு கூடி மகிழும் நாள் விரைவில் நிகழும்..

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி தோழா
தங்களின் இன்னாளும் வெகுவிரைவில் வர வேண்டுகிறேன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...