இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, July 3, 2010

காதலுலகம் கலியுகமே...


கண்ட வித்தைகளால்

கண்டிராத ஆனந்தம்
காதல் என்ற மூன்றெழுத்தின்
கனிவில் காண்பதுண்டு

கன்னியவளின் மலர்ந்த முகம்
காணத்துடித்து ஏக்கம் கொண்டு
காத்திருந்து கண்டவுடன்
காட்சி தரும் காதலுலகம்

பட்டாம் பூச்சி சிறகடிப்பதுபோல்
விண்ணில் விண்ணைத்தொட
வீர்கொண்ட உணர்வுகள்
வீழ்வதும் காதலின் காலடியில்

காதலின் ஆத்மீகம்
காணாதவர் ஏங்கி நிற்க
கண்டவர் மயக்கத்தில்
காதல் உலகம் மகிழ்கிறது

காதலனும் காதலியும்
காத்திரமான உறவுக்கு
காவலராய் கொடைபிடிக்கும்
காதலுலகம் கலியுகமே..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...