இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, July 14, 2010

காதலில் உயிரானாய்....
அன்பே உனைக்காணும் வரை
அடக்கிவைத்த உணர்வுகள்
அத்தனை வீர்கொண்டெழ
அதிசயித்த நிகழ்வென்ன

காதல் என்றறியா வாலிபனாய்
காலமெல்லாம் கவலையில்லாமல்
காதோர சில்மிசங்களை
காணாத சிறியவனாய் இருந்தேனே

கன்னி உன் கண்களில்
கதிரவன் ஒளி மங்கும்
காதல் பார்வை வீசிட
கால்தடமாற வைத்தாயே...

கமகமக்கிறது காதல் வசந்தம்
கருவுற்றது காதலரும்பு
சிலிர்க்கிறது தேகம் உன்தரிசன
சிற்றின்பம் தேடுகிறேன்

காதலனாய் கவிழ்ந்து விட்டதால்
காகிதங்களுடன் கதைகள்பேசி
இன்பலோகம் திறந்திருக்க
இதிகாசம் காண்கிறேன்.

இனி என் மூச்சில் சுவாசமாய்
இனி என் பேச்சில் மொழிகளாய்
இனி என் உயிரின் நாதமாய்
இனிஉன்தன் நிழலாவேன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

Riyas said...

//கன்னி உன் கண்களில்
கதிரவன் ஒளி மங்கும்
காதல் பார்வை வீசிட
கால்தடமாற வைத்தாயே...//

ம்ம்ம் அழகிய கவிதை.

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி நண்பா ரியாஸ்

MANO said...

கவிதை நன்றாக உள்ளது.

மனோ

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி மனோ தங்களின் வருகையில் ஆனந்தம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...