இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, January 27, 2016

அளவையில் மோசடி (விழிப்புணர்வுக்கான பதிவு)

அண்மையில் விடுமுறைக்காக நாட்டில் இருந்த போது இறைச்சி வாங்குவதற்காக இறைச்சுக் கடைக்கு சென்றிருந்தேன் அங்கிருந்த வியாபாரியிடம் 1kg இறைச்சி கேட்டேன் அங்கு அளவு செய்து தரப்பட்ட அளவையில் எனக்கேற்பட்ட சந்தேகத்தினை அனுபவ ரீதியாக அவதானித்த விடயத்தனை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவும் இவ்வாறானவர்களை அடையாளங்காட்ட வேண்டும் என்பதற்காகவும் இப்பதிவினை இடுகிறேன் சந்தேக முள்ளவர்கள் நீங்களும் அவதானித்து மோசடிக்காரர்களை அடையாளங்கண்டு கொள்ளுங்கள். 

நான் சென்றிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த நிறுவைத்தாரசினுள் ஒரு பக்கம் படிக்கல் வைக்கப்பட்டிருந்தது நான் கேட்ட அளவு இறைச்சியினை வெட்டியெடுத்து மறுபக்க தராசியினுள் இட்டு விட்டு சரியான அளவு படிக்கல் மாற்றம் செய்தார் அளவைக் கல் மேலெழுந்து கதித்ததன் பின்னர் இறைச்சியினை எடுத்து பொதிசெய்து  இன்னுமொரு துண்டினை மேலதிகமாக வெட்டி நிறுக்கப்பட்ட இறைச்சியுடன் சேர்த்துத் தந்தார் (வாங்குகின்ற நமக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்  காரணம் மேலதிகமாக அல்லவா நிறுவை செய்து தந்திருக்கிறார்) என் கைத் தூக்கத்தில் எனக்கு சிறு சந்தேகம் ஏற்படவே அருகில் உள்ள இலக்ரோனிக் தராசில் நான் வாங்கிய இறைச்சுப் பொதியை நிறுவை செய்து பார்த்தேன் மேலே உள்ள படத்தில் காட்டிய விடை கிடைத்தது........

சிந்தித்துப்பாருங்கள் இன்றய காலத்தில் 600ரூபாவை தாண்டிய நிலையில் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ இறைச்சி இவர்கள் விற்பனை செய்கிறார்கள் எவ்வளவு பெறுமதியை மக்களிடமிருந்து கொள்ளை செய்கிறார்கள் இறைவனுக்கு அணுவளவும் பயமில்லாமல் அற்ப பணத்திற்காக பட்டப்பகலில் சூரையாடுகிறார்களே நாளை மறுமையில் இறைவனின் கேள்வி கணக்கிலிருந்து தப்பிவிடுவார்களா.....????????

பிறகொருதினம் வேறொரு கடையில் இவ்வாறே வாங்கிய பின்னர் நிறுவை செய்து பார்த்தேன் அங்கு 1kg ஐ விட அதிகமாகவே இருந்தது ஆக அனைவரும் தவறிழைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவில்லை ஒரு சிலர் இவ்வாறான திருட்டுத்தனத்தினை ஆங்காங்கு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவதானமாக இருங்கள் 

இது அவர்கள் மீது மாத்திரம் குற்றமில்லை இவர்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு மேற்பார்வை செய்யாத அதிகாரிகளின் குற்றம் கண்மூடித்தனமாக வாங்கிச்செல்கின்ற எம்போன்ற பாமரர்களின் குற்றம் இதை மேலோட்டமாக பார்க்கின்றவர்கள் சாதாரணமாகச்  சொல்வார்கள் இது அப்பட்டமான பாவச்செயல் குற்றத்துக்குரிய தண்டனை என்பதை அவர்கள் காதுகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் 

சமுகத்தில் நிலவுகின்ற அத்தனை குற்றச்செயல்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அனைவரும் அடிப்படையாக அமைகிறோம் இப்படியானவர்களை அடையாளங்கண்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் 

இது எமது பிரதேசத்துக் கடை  எந்த ஊர் என்று சில காரணங்களுக்காக குறிப்பிடவில்லை நீங்களும்  அவதானித்துப்பாருங்கள் தனிமையில் தொடர்பு கொள்ளுங்கள் தேவையேற்படின் தகவல் தருகிறேன் 
நன்றி 

Tuesday, January 26, 2016

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம் (போட்டிக்காக)காலாகாலத்து அனர்த்தங்கள்
உணர்த்துகிறது மனிதாபிமானமெதுவென்று
ஈரமற்று வற்றிக்கிடந்த மனிதாபிமானத்தினை
பெருமழை வந்து ஊற்றெடுக்கச் செய்திருக்கிறது

ஜாதிமத பேதங்களால் அன்னியமாகி
அன்பறுந்த குரோதங்கள் வளர்த்து
அயலவனின் அவலங்களில் மகிழ்ந்து 
அகம் நிறைந்து சாதித்தவருமுண்டு 

தனக்கென அனைத்தும் வேண்டுமென 
தமையனானாலும் தர மறுத்து
தஞ்சம் தன் சொத்தெனப் பதுக்கி 
கஞ்சன்தானென ஏற்றவருமுண்டு 

வானத்து ஓர்குடையின் கீழ் பிறந்த 
மனிதர்கள் நாம் ஒன்றே என்று 
மழையும் கண்ணீராய்ப் பெருக்கெடுத்து 
அனைத்தும் இழந்தோராய் ஒன்றுசேர்த்தது 

இளகிடா மனங்களும் வருந்தி 
இரங்கிடா மனிதங்களும் இரக்கம் கொண்டு 
இதுதான் மனிதாபிமானமென்று 
நிரூபித்தனர் வள்ளல்களாய் அன்று 

Wednesday, January 6, 2016

தனயனின் தவிப்பு........


தாய் தாயென்று தனயனிங்கு தவிக்கிறேன் 
தரணி உள்ளமட்டும் உன்மடியில் 
துயில்கொள்ளத் துடிக்கிறேன் 
தருவாயா தாயே உன் மடி தருவாயா???

தஞ்சம் உன்னுடனாகி - என் 
நெஞ்சில் உனைத்தாங்கி 
தாலாட்டிச் சீராட்டிட -  தாயே 
வந்துவிடு என்னுடனே வந்துவிடு 

ஒத்தையாய் பெத்தெடுத்து 
ஒய்யாரமாய் வளர்த்தெடுத்து 
உலகறியச் செய்தவளே உன் 
உளம் மகிழக் காத்திடுவேன் 

என்னுள் உனக்கான ஏக்கங்களுடன் 
உன் உதிரம் ஓடிக்கொண்டிருக்கிறது 
நீ என்னோடு இல்லையென்று 
என் உணர்வுகள் உணர்விளந்திருக்கிறது   

அம்மா நீ என் உலகம்மா 
இல்லையென்றால் நான் இல்லையம்மா
எத்தனை உயர்வினை அடைந்தாலும் 
நீயின்றி அது துச்சமம்மா 

தாலாட்டு உன்மொழியிலின்றி 
துயில்கொள்ளவும் பிடிக்கவில்லையம்மா 
நீயின்றிய மரணம் கூட - எனை 
சேர்க்கவிருப்பதும் நரகத்தில்தானெயம்மா 

இறைவனை முன்னிறுத்தி
மன்றாடிக் கேட்கிறேன் உன்னிடமே
வரமொன்று தந்துவிடு மடிவதற்குள் 
வாழும்வரை வந்துவிடு என்னோடு

Tuesday, January 5, 2016

சின்னப்பாலமுனை ஹிக்மா விடயமும் பிரதி அதிபரும்


சின்னப்பாலமுனை ஹிக்மா பாடசாலை சம்பந்தமான விடயம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் சில விடயங்களை எத்திவைத்திட கடமைப்பட்டிருக்கின்றேன் ஒரு சிலரின் விதண்டாவாதமும் இட்டுக்கட்டான தகவல்களும் அங்குள்ள சமுகத்திற்கும் பிரதி அதிபரான முகா அவர்களுக்கும் இழுக்கு வரும் விதமாக facebook போன்ற தளங்களில் பகிரப்படுவதையும் கண்டேன் அக்கருத்துகளை முழுவதுமாக மறுக்கிறேன் எதிர்கிறேன்.

கரையோரப் பிரதேசமான இக் கிராமத்தின் ஐந்து தசாப்தங்கள் கடந்த பழமை வாய்ந்த இப்பாடசாலையின் வரலாறு யாவரும் அறிந்ததே பின் தங்கிய பிரதேசமானதாலும் பிரதான வீதியிலிருந்து 1 KM தொலைவில் அமைந்திருப்பதாலும் பல பின்னடைவுகளை இப்பாடசாலை சந்தித்திருக்கிறது என்பது சத்தியம் இந்த ஒரு காரணத்தினாலேயே பிற பிரதேசங்களில் இருந்து வருகின்ற திறமையான ஆசிரியர்களாலும் அதிக காலம் இப்பாடசாலையுடன் தொடர முடியாத இக்கட்டான நிலை காணப்படுகிறது அதே நேரம் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை  பயிற்சி ஆசிரியர்கள் கூட இப்பாடசாலைக்கு வழங்கப்படுவதும் விரும்பி வருவதும் மிகமிகக் குறைவு ஆசிரியர்கள் தங்கி சேவை செய்யக் கூடிய பௌதிக வளங்களும் இங்கில்லை ஒரு பாடசாலையின் மிக முக்கியமான தேவையான ஆசிரியர் நியமனம் சரியாக இல்லாததன் காரணமாக பாடசாலையின் வளர்ச்சி பின்தங்கிச் செல்கிறது

அரிதாகக் கிடைத்த வளங்களைப் பயன்படுத்தி இத்தனை காலமும் இப்பாடசாலை 9ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்து பல திறமையான மாணவர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதில் அச்சமுகத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்பாடசாலையுடன் ஒப்பிடும் போது ஏனைய உயர்தரப்பாடசாலைகள் மிகவும் தூரப்பிரதேசங்களில் அமைந்திருப்பதால் 09ம் ஆண்டுடன் வெளியேறுகின்ற அனைவரும் தங்களது கல்விகளைத் தொடர்வதில்லை அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகள் தூரப் பிரதேசம் சென்று கற்றுவருவதில் உள்ள அசௌகரியங்கள் காரணமாக பெற்றோர்கள் சிறப்பாக கற்கின்ற பிள்ளைகளைக் கூட இடைநிறுத்தி விடுகிறார்கள் அதேபோல் கடற்கரையை அன்மித்த பகுதியாதலால் சில ஆண்பிள்ளைகள் கடற்கரையுடன் எதிர்காலத்தினைக் கடத்தக் கூடியதாக மாற்றிக்கொள்கிறார்கள் இவ்வாறான நிலையினைக் கருத்தில் கொண்டதால்தான் ஹிக்மா வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரைக்குமாவது தரமுயர்த்த வேண்டும் என்று பாடசாலைக் சமுகத்தவரால் கோரிக்கை வைக்கப்படுகிறது என்பதுதான் உண்மை

எதிர்வருகின்ற வருடத்துடன் அதனை ஏற்படுத்தித் தருவதாக கல்விப்பணிப்பாளர் வாக்குறிதி அழித்திருப்பதாக அறிகிறேன் அது நடந்தேற இறைவனப் பிரார்த்திப்பதோடு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் எனவும் வினையமாக கேட்டுக்கொள்கிறேன்

இவை தவிர இப்பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதும் அவற்றை நிவர்த்திப்பதும் மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது மேலே குறிப்பிட்டது போன்று ஆசிரியர் பற்றாக்குறை கட்டிட வசிதிகள் தங்குமிட வசதிகள் மலசல கூட வசதிகள் என்பவைகளைத் தாண்டி அதிபர் பிரச்சினை இருக்கிறது.  கடந்த சில வருடங்களின் முன்னர் ஒரு அதிபரின் வழிகாட்டலில் புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் ஆசிரியர் விடயங்களில் மிகவும் முன்னேற்றகரமான சூழல் காணப்பட்டது அந்த அதிபரின் மாற்றுதலின் பின்னர் தற்போதய அதிபருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சபைக்கும் இடையேயான முறுகல் நிலையும் தற்போதய அதிபர் நியமனத்தின் பின்னரான பாடசாலையின் பின்னடைவு மேலும் மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது என்பது ஒரு முக்கிய விடயம் அதிபரின் திறமையான அழுகையில் ஒரு பாடசாலையின் முன்னேற்றம் தங்கியிருக்கிறது என்பது தெட்டத்தெளிவான விடயமாதலால் அனைவரும் அதிபரை மாற்ற வேண்டும் அதனுடன் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்பாரக்கிறார்கள்.

இந்த விடயத்திற்கும் இந்த சமுகத்தைச் சார்ந்த பிரதி அதிபருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை சமுக அக்கறையினை நோக்கமாகக் கொண்ட அனைவரது நடவடிக்கைகளுமே தவிர யாருடைய எந்தவித குரோதங்களோ தனிப்பட்ட கோபங்களோ அல்ல எதிர்கால எம் சமுகத்தின் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் அதற்கான அத்திவாரங்கள் சிறப்பாக அமைத்திட வேண்டும் என்கின்ற நல்ல நோக்கமே என்பதை அனைவருக்கும் அறிவிக்க விரும்புகின்றேன் தற்போதய அதிபர் எனது உற்ற தோழன் அவருக்கு எதிரான எனது கருத்தென்று பதிவு செய்யாது இந்த உண்மை விடயத்தினை அவரும் புரிந்து கொண்டு இச்சமுகத்தின் தேவையினை முடியுமான வரை நிவர்த்திப்பார் என்று எதிர்பார்க்கிறேன்

அனைத்து தரப்பினரிடமும் எனது வினையமான விண்ணப்பம் என்னவெனில் பின்தங்கிய இப்பிரதேசக் குழந்தைகளை மாத்திரம் கவனத்தில் கொண்டு இறைவனுக்கா யாரும் யார் மீதும் அவதூறுகளை விதைக்காது உங்களாலான உதவிகளை மாத்திரம் செய்து தாருங்கள் இறைவன் சுவனத்தில் உங்களை சேர்த்துக்கொள்வான் மிக்க நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...