இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, September 29, 2012

முஸ்லிம் காங்கிரஸிக்கு எச்சரிக்கை காத்திருக்கிறது


"பேசினால் பொய் பேசுவான் வாக்களித்தால் மாறுசெய்வான் நம்பினால் துரோகம் செய்வான்”  இது நபி மொழி இது இன்றய கால அரசியல் வாதிகளைப் பார்த்து அன்று நபியவர்கள் கூறியது போல் காட்சிதருகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசியல் வாழ்நாளில் கடந்த 10 - 15 வருட காலப்பகுதியில் பல்வேறு கசப்பான உணர்வுகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கின்ற அப்பாவி மக்களின் நிலை இன்னும் மாறவில்லை மாறுமா என்றும் தெரியவில்லை இதற்கென எம் அரசியல் வாதிகள் என்ன பிரயத்தனம் செய்திருக்கிறார்கள் என்றால் அதிலும் பல கேள்விக் குறிகளைக் கண்டு நிதர்சனமான வாழ்க்கைக்கு வழிதேடிக்கொண்டிருக்கின்ற வாக்காளனாய் நானும் உங்களின் முன்னால்........

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி பல்வேறு பட்ட கருத்துகளும் விமர்சனங்களும் இன்றய இணையத்தளங்களையும் பத்திரிகைகளையும் பக்கம் பக்கமாக எழுதி வார்க்கப்பட்டிருக்கிறது அவற்றுள் மிக முக்கிய கருதுகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சோரம் போய்விட்டார் மக்களின் வாக்குகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் மக்களின் ஆணை அரசுக்கெதிரானது அதனை அரசிடமே அடகுவைத்துவிட்டார் முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று வார்த்தைகளின் மாத்திரம் உரைக்கின்றார் என்றெல்லாம் வசைபாடல்கள் எம் சமுகத்தவர்களாலும் மாற்று சமுகத்தவர்களாலும் விதவிதமான கோணங்களில் எழுதி தீர்க்கப்பட்டுவிட்டது இவைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு முஸ்லிம் சமுகத்தின் பொறுப்புதாரிகளான முஸ்லிம் தலைவர்களின் கைகளில் இருக்கிறது என்பது மறைமுகமான உண்மை இவ்வாறான கேள்விகளுக்கும் இந்த அரசியல் மாயைகளுக்கும் விடைகளை எதிர்காலமே பதில் தரவல்லது என்பதும் உண்மை 

இருந்த போதிலும் கடந்த காலங்களும் இவ்வாறான பல கேள்விகளையும் ஏமாற்று வித்தைகளையும் தாங்கிய அரசியலைத்தான் நாம் கண்டிருக்கிறோம் அனுபவித்திருக்கிறோம் ஒன்றுபட்ட ஒரு மரத்தின் கீழ் இருந்த சமுகம் இன்று சின்னா பின்னமாகி பல கிளைகளாக மாறி சீரழிந்திருப்பதை அனைவரும் அறிவோம் முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை வாதிகள் கூட இன்று சிந்திக்கும் அளவு அரசியலின் தன்மை மாறியிருக்கிறது ஏனென்றால் பொறுமைக்கும் எல்லையுண்டு எத்தனை காலம் பொறுத்திருப்பது என்ற கேள்விக்கு விடைதெரியாத படித்த இளைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தனக்கென ஒரு எதிர்காலம் என்று சிந்திக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அவ்வாறு சிந்தித்தவர்கள்தான் மாற்றுக் கட்சிகள் என்று பிரிந்து சென்று இன்றய நிலையில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரைவாசிக்கு மேல் மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து பேரினவாதக் கட்சிகளின் வெற்றிக்கு வழிவகுத்து நிற்பதை யாரும் அவதானிப்பதாக தெரியவில்லை இந்த நிலைக்கு எது காரணம் என்று ஆராய்ந்தால் தடம்புரளுகின்ற எமது நிலைப்பாடும் ஆழுமையற்ற அரசியலுமே என்பதை இன்றய பாமரன் கூட உணர்ந்து கொள்கிறான் 

இது கடந்த காலத்தினை அடிப்படையாக கொண்டது இந்த நிலை தொடரும் பொழுதுதான் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் என்ற கட்சி இருக்குமா என்ற கேள்வி அனைவரின் மனங்களிலும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது முஸ்லிம் காங்கிரஸினை நம்பி உழைத்திருந்த என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் சொல்லொண்ணாத்துயர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு ஈடேற்றம் இல்லை என்பது அவர்களே அறிந்த உண்மை அதை விட்டு விட்டாலும் இன்னும் முஸ்லிம் காங்கிரசை நம்பி வாழுகின்ற இளைஞர்களையும் குடும்பங்களையுமாவது திருப்த்திப்படுத்தும் நிலைக்கு எதிர்காலத்தில் மாறவில்லை என்றால் இத்தருணத்தில் இக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்பதை எச்சரிக்கையாக கூறிவைக்க விரும்புகிறேன் ஏனென்றால் எல்லாக்காலமும் கொள்கை என்று உரைத்த வாய்கள் இன்று ஏமாற்றப்பட்டிருக்கின்றன மோசடிக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன இவர்களின் பின்னால் எமக்கு எதிர்காலமில்லை என்று சிந்திக்கும் நிலைக்கு கொண்டு விட்டிருக்கிறார்கள் 

ஆகவேதான் இந்த விடயத்தினை இந்தக்காலகட்டத்தில் பதிவு செய்ய நினைத்தேன் இன்று நடந்தேறிய கிழக்கு மாகாண தேர்தல் களம் பற்றி எடுத்து வைக்கப்பட்ட நியாயங்கள் அனியாயங்கள் முடிவுகள் பற்றிய எதிர் வாதங்களுக்கு விடைகளாக எதிர்காலத்தின் அரசியல் நடவெடிக்கைகள் தீர்மானிக்க இருக்கிறது வாக்கு கேட்கின்ற காலத்தில் மாத்திரம் மக்களை நாடி கொள்கையும் கீதமும் பாடிய காலம் மலையேறிவிட்டது இன்றய சிறார்கள் முதல் மூதாட்டிவரை தன்னைப்பற்றி சிந்திக்க துவங்கிவிட்டார்கள் என்ற சிவப்புக் கொடியினை இங்கு அடையாளப்படுத்தியிருக்கிறேன் இந்த கருத்தினூடாக முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று மார்பு தட்டுகின்றவர்ளின் எதிர்கால அரசியலுக்கு ஒரு வாக்காளனாய் நானும் ஒரு கோடு வரைந்திருக்கிறேன் பயணிப்பதும் பாதைமாறுவதும் உங்களின் கைகளில் இருக்கிறது உங்களின் அரசியல் வாழ்வுக்கு ஒவ்வொரு பாமரனும் இட்ட வாக்குகளுக்கு வெகுமானமாய் அவர்களின் வாழ்வுக்கு வழிசெய்யுங்கள் என்றும் வினயமாய் வேண்டிநிற்கிறேன் இறைவன் அனைவருக்கும் அருள் புரிவானாக.  

Saturday, September 15, 2012

அமெரிக்காவுக்கெதிரான எமது போராட்டம்அன்புக்குரிய சகோதர்களே....!!

அமெரிக்கா என்னும் அரக்கனின் மீண்டுமொரு அவமதிப்பு இஸ்லாத்திற்கு எதிராக அரங்கேறியிருக்கிறது அனைத்து உணர்வாளர்களும் வெகுங்டெழுந்திருக்கிறார்கள். இது இன்று மட்டுமல்ல காலா காலம் தொடர்கிறது. நிகள்கின்ற காலத்தோடு மட்டும் கிளர்ந்தெழுகின்ற எம் சமுகம் காலப்போக்கில் அத்தனையும் மறந்து மீண்டும் கைகோர்த்து நடக்கின்றன. 

இன்றே சிந்தியுங்கள் எதிரியையும் சினேகிதனாக காணும் எம் அரிய மார்க்த்திற்கு தொடர்ந்து பங்கம் விழைவித்த வண்ணமிருக்கும் முனாபிக்கான அமெரிக்காவுககு தக்க பாடம் புகட்டவேண்டிய கட்டாயக் காலத்தில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம் 

அனியாயமாக அரபுலகத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் எத்தனை உயிர்களை பறித்து அதன் குருதிகளில் குழித்து கும்மாளமடித்த அமெரிக்கர்களுக்கு அரபுலகமே இருப்பிடங்களும் சொகுசு வாழ்க்கையும் கொடுத்து நட்புறவாடிவருகிறது.  இன்று எழுகின்ற அந்த உணர்வுகள் அவர்களின் இந்த மடமைகளுக்கு மருந்தாய் அமையாதது ஏன் அதற்கான முயற்சிகளை ஏன் செய்வதில்லை?  

அமெரிக்கா போன்ற நாடுகளின் உற்பத்திகளில் 60-70 வீதமான உற்பத்திகளுக்கு வியாபாரச்சந்தை மத்திய கிழக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளும்தான் இவற்றை கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளும் போர்களும் செய்து தனது ஆதிக்கத்தினை நிலை நாட்டி வருகிறது அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கேனும் இது பற்றி சிந்திப்போமானால் அமெரிக்காவின் அனைத்து உற்பத்திகளையும் தடைசெய்யலாம் அவைகளுக்கு பகரமான ஏனைய நாடுகளின் உற்பத்திகளைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும் இதை செய்வதை விடுத்து எதிர்ப்பினை மாத்திரம் காட்டிவிட்டு அடங்கிவிடும் உலகமாக முஸ்லிம் உலகம் இருப்பதுதான் கவலையான விடயமாகும் 

கொழுந்துவிட்டெரியும் உணர்வுகளை எதிரிகளின் வெற்றிகளுக்கு எதிராக திருப்பிவிடும் போதுதான் அவர்களை திரும்பிப்பார்த்திடச்செய்ய முடியும் கிளர்ச்சிகளோடு மாத்திரம் நின்றுவிடாது அன்றாடம் எம்வாழ்கையில் பாவிக்கின்ற அவர்களின் உற்பத்திகளை தடைசெய்வதன் முலமாக ஒவ்வொரு தனிநபரும் இந்த போராட்டத்தில் பங்குகொள்ளலாம். இன்றே புறப்படுங்கள் அவர்களை அழித்திட செயல்படுங்கள். அவர்களின் உற்பத்திகளை அவர்களின் முகங்களிலேயே தூக்கி எறிந்துவிடுங்கள்.. எம்மிடமே இலாபங்களடைந்து எம் மதத்திற்கெதிராகவும் சமுகத்திற்கெதிராகவும் செயல்படும் அரக்கன் அமெரிக்காவை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாம் அழித்திடலாம். மனதில் ஒரு உறுதியை எடுத்துக்கொள்ளுங்கள். தயாராகுங்கள் இன்றே தயாராகுங்கள். இறைவன் எம் அனைவரையும் ஒன்றுபடச்செய்வானாக............அவர்களின் நாச வேலைகளுக்கு தக்க பரிகாரம் அளித்திடுவானாக.....

நாளை நமக்காய் உதயமாகட்டும்

பேரினவாதம் பாடியோரும்
வால்பிடித்து வாதங்கள் சேய்தோரும்
உன் எழுச்சிகண்டு வீழ்ந்தனர்
இன்று உன் காலடியில்

வேண்டாம் என்றோருக்கு
வேண்டியதுன் தயவென்று
ஆக்கிவிட்ட இறைவனுக்கே
புகளனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்

ஒற்றுமை எங்கள் பலமென்று
மீண்டும் நிரூபித்த மக்களுக்கே வெற்றியின்று
அற்புதமாய் வெல்லயிருந்ததை
அறியாதோர் சிலரெமது வாக்குகளால்
வெற்றிகண்டு தோற்றோருக்கு
அனுதாபங்கள் ஆறுதலாகட்டும்

Monday, September 3, 2012

காலம் பொன்னானது இன்றே செயல்படுவோம்......

அன்புச் சகோதரர்களே........


அரசியல் அட்டகாசங்கள் அங்குமிங்கும் அலை மோதுகின்றது யாரோ ஒருவரின் இருப்பிற்காய் சகோதரனை சகோதரியை வெட்டி வீழ்த்தும் அனாகரீக அரசியல் அத்துமீறல்களாய் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமிருக்கிறது. தேர்தல் காலம் வந்தால் தோழில் கைபோட்டிருந்த உற்ற தோழனையும் எட்டிநின்று பார்த்து ஏழனம் செய்யும் அரசியல் காலமாக மாறியிருக்கிறதை காண்கிறோம். அரசியல் மேடைகள் அசிங்கமான வார்தைகளாலும் வசைகளாலும் கேட்பதற்கு அருவருப்பினைத் தருகிறது. அத்தனையும் ஒரே சமுகம் ஒரே மதம் ஒரே இறைவனை ஒரே நபியை பின்பற்றுகின்ற உத்தம சமுகத்தினை சின்னாபின்னமாக்குகின்ற ஓர் ஆயுதமாய் இன்று அரசியல் மாறியிருப்பதுதான் கவலைக்கிடமானதாக இருக்கின்றது. என் சகோதரனுக்கு நான் கை ஓங்குகின்றேன் என்று ஏன் சிந்திக்க முடியவில்லை அப்படி என்னதான் எமது கண்களை மறைத்திருக்கிறது.....மாற்றுச் சமுகத்தின் அரசியலை ஏன் உங்களால் உற்றுப்பார்க்க முடியவில்லை அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள் அவர்களின் நோக்கம் எங்களுக்கு அபிவிருத்தி வேண்டும் உழைப்பதற்கு வேலை வேண்டும் எங்களுக்கு உயர்பதவிகள் வேண்டும் என்று யாரும் கருதவில்லை அவர்களது சமுகத்தின் நிலையினை ஒன்றுபட்டு உலகுக்கு உணர்த்திடக் காத்திருக்கிறார்கள் நிச்சயமாக பேரின அரசியலோடு ஒட்டியிருக்கின்ற சில ஒட்டுண்ணிகளுக்கும் பாடம் இந்த தேர்தலில் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்பதை ஊர்ந்து ஆராயும் போது காணக்கூடியதாக இருக்கிறது அவர்களுக்கான ஆசனங்களை அவர்கள் இன்றே தீர்மானித்துக்கொண்டார்கள் காட்டிக்கொடுத்தோரும் கூட்டிக்கொடுத்தோரும் இந்த தேர்தலோடு வீடுகளிலும் வெளிநாடுகளிலும் குடியேறுவார்கள்.......


Related Posts Plugin for WordPress, Blogger...