ஆவலுடன் கட்சிவளர்த்து
சமூகத்தின் எழுச்சிக்காய்
ஒற்றுமையும் கண்டு
வீறுகொண்டெழுந்திட
விழுதுகளாய் பலம்கொடுத்து
மாற்றான் வசைகளும்
(காவல்)படைகளின் அடிகளுமாய்
தோள்மீது சுமந்து....
துயில் கொள்ள மறந்த
நண்மைகள் நோக்கிடாத
வாக்காளனாய் வலம் வந்தோம்...
பேறுகளடைந்தவன்
பேரெதிரியாய் மாறினான்
பேரம் பேசலோடு
பதவிகளும் அடைந்தான்
தலைவனிருக்கிறானென
தருணம் வருமென்று
தவமிருந்த தளபதிகளிங்கு
இன்னும் அனாதைகளாய்
ஆதரவு நாடுகிறோம்..
மரம்விட்டு மரம் தாவும்
குரங்குளாய் சுயநலந்தேடியன்று
எம்மரம் விட்டுத்தாவிய
எட்டப்பர் கூட்டமொன்று
மீண்டும் மீழ்கின்றனர்....
உம்தயவிற்காய்...
நாளையும் இவர்கள் அவர்கள்தான்
கட்சியின் நிலமையோடும்
தலைவனின் வழிகாட்டலோடும்
நீர்கீறிய கோட்டில்...
பயணித்த தொண்டர்களாய்
தசாப்தங்கள் கடந்தும்
காத்திருக்கிறோம் ஏழையாய்
கல்விழுந்த தேனிக்களாய்
சிதறிய சில்லுகளாய்
அங்குமிங்குமாய்...அலைந்து
வாழ்க்கைக்கு வழிதேடி
வாழ்வைத்தொலைத்திங்கு
வாழத்துடிக்கிறோம்
உன்னுயர்வைத்தேடி
உற்ற நேசர்களாய்
உளமாறப்பிரார்த்தித்திருந்த
உண்மை உறவுகள் நாங்கள்
இறைவனின் நாட்டம்வரும்
எம்தலைவன் உதவிவருமென்று
எத்தலைவனையும் நாடிடாத
உண்மைத் தொண்டர்கள் நாங்கள்
தகப்பனாய் மாறி
துயர்துடைப்பீர் என்றிருக்கிறோம்..
தொடர்ந்தும் கைவிடப்பட்ட மந்தைகளாய்
அரசியல் உறவுகளிருந்தும்
அனாதைகளாய் எங்கள் நிலை.
விடியலைநோக்கிய
அனாதைகள் சார்பாக.......
1 comments:
அருமையான கவிதை அரசியல் கட்சிகள் எல்லாம் சுயநலத்தோடு செயற்படுபவை நண்பா
உங்கள் டெம்ப்ளேட் நன்றாக உள்ளது
Post a Comment