இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, January 5, 2011

காமம் தேடும் காதல்.....


வாழத்துடிக்கும் வாலிபனே
உண்மைக்காதலை ஊர்ந்தறிந்திடு
காதலெனும் அழகுத்தேரினில் 
பவ்வியமாய் நீயும் அமர்ந்திடு


கன்னியொன்று என்றுகண்டு 
கண்ணடைத்து காதல் சொல்லி 
காமவலையில் கட்டுண்டு
காளையுனை அழித்திடாதே...


அழகியகுணம் அன்புநிறைந்தமனதுடன் 
அவளொருவள் உனக்காகவே
பூலோகம் அடைந்துவிட்டாள்
வீற்றிருக்கிறாள் வைகறையில்


நீயிழைக்கும் தவறொன்றை 
உன்துணை செய்ய ஏற்பீரா..
கற்பின் சமநிலைக்கு 
உன் கற்பும் முக்கியமே...


காதலின்றிய காமத்தில் இன்பமில்லை 
காமம் தேடும் காதல் வெல்வதில்லை 
காதலின்றி மனிதம் வாழ்வதில்லை 
வாழ்வின் அந்தமும் காதலாகிறதே..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

dineshkumar said...

நீயிழைக்கும் தவறொன்றை
உன்துணை செய்ய ஏற்பீரா..
கற்பின் சமநிலைக்கு
உன் கற்பும் முக்கியமே...

சாட்டையடி வரிகள் சார்

யாதவன் said...

அனைவரும் வாசிக்க வேண்டிய கவிதை
அம்பு போல் பாயுது வரிகள்
Read More எடுங்கள் நண்பா ஒரே பார்வையில் கவிதை இருந்தால் தான் வாசிக்க தூண்டும்

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

மிக்க நன்றி நண்பா read more இனால் மிக விரைவாக திறந்து கொள்ளும் என்று அறிவுறுத்தப்பட்டேன் அதனால்தான் இட்டுவைத்திருக்கிறேன் நன்றி

நேசமுடன் ஹாசிம் said...

@dineshkumar

மிக்க நன்றி நன்றி

தோழி பிரஷா said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

http://www.cineikons.com said...

சினிமா கேலரி · Latest Tamil Video · வீடியோ · Tamil Cinema News Functions, kollywood gossips.sun tv serials,Tamil tv serials online, Tamil tv Shows online கோலிவுட் கிசுகிசு சினிமா செய்திகள்,Tamil Songs தமிழ் MP3 பாடல்கள் · தமிழ் வானொலி · MP3 பாடல்கள்

http://www.cineikons.com

http://cineikons.com

இரவு வானம் said...

arumai sir, karpu aankalukkum vendum

varpugal said...

i m feeling proud for getting these words from a male. keep writing. wishes.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...