இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, January 27, 2011

கரை சேரா ஓடங்கள்....


வேண்டும் ஈழமென்று
வேரூண்றிய உணர்வுகளோடு
பயணமொன்றாரம்பித்து
பாதிவழி செல்லுமுன்
சுழன்றடித்த சூறாவளியில் சிக்கிய
ஓடமொன்றங்கு தத்தளிக்கிறது

சமாதானமே தீர்வென்று
தார்மீகம் தவறவிட்ட
தலைவர் கூட்டங்களின்
தீர்மானக் கோப்புகள் மட்டும்
புளுதிபடிந்த நிரைகளிலிங்கு
கொட்டிக்கிடக்கிறது....

இருபக்க அடிகள் தாங்கி
இயல்பு வாழ்வே கேள்வியாகி
தீர்ந்துபோன கண்ணீர்களோடு
பல்லாயிரக்கணக்கான மனிதங்கள்
பகலிரவாயின்னும்
கரைசேரத்துடிக்கின்றனர்.....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

sakthistudycentre-கருன் said...

எது எப்படியோ...நம் இரத்த சொந்தங்களை அழித்தவர்களை ஒழித்தால் சந்தோஷப்படும் பலகோடி இதயங்களில் நானும் ஒருவன்.

sakthistudycentre-கருன் said...

கவிதை பிடித்திருந்தால் இன்ட்லி, மற்றும் தமிழ்மணத்தில் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி தோழா எனக்காக தாங்கள் வோட்டிட கோரும் நல்ல குணம் எனை மகிழச்செய்கிறது
இலக்கிய வழியில் என்றும் சேர்ந்துழைப்போம் நன்றி

தோழி பிரஷா said...

பாவம் செய்ததால் தமிழனாய் பிறந்தமோ..?
அருமை...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...