இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, December 29, 2010

புத்தாண்டே...புதுவரவே.


ஈராயிரத்துப்பத்து வருடங்கள் 
ஒரு நொடியில் கடந்ததுபோல் 
புத்தம் புதியதுவாய் 
மலர்வதோடு மறைகின்றாய் 

உன்னுள் அகப்பட்ட 
உயிர்களின் அலறல்களும் 
சீற்றங்களில் சிதறிய 
மனிதர்களின் ஆசைகளும் 
அங்காங்கே ஒலிக்கிறதே..

முடித்தாய் பல ஆயுட்களை 
ஏற்றினாய் பல ஆட்சிகளை 
வீழ்த்தினாய் பல வீரர்களை 
வென்றிருக்கிறாய் பல இன்னல்களை

கடந்தவைகளோடு மறந்து 
மறைந்தவைகளோடு அகன்று 
விலக்கல்கள் தவிரந்து 
வாழ்ந்திட வழிசெய்யாயோ..

புத்தாணேட உன் புதுவரவோடு 
உலகெங்கும் சமாதானம் நிலவவேண்டும் 
சகோதரத்துவப்பாசம் ஓங்க வேண்டும் 
சமத்துவ ஆட்சி நலவ வேண்டும் 

பிரிவுகளற்ற உறவுகள் வேண்டும் 
பிணிகளற்ற தேகம் வேண்டும் 
மனிதனை மதிக்கும் மனிதம் வேண்டும் 
மதங்களை நேசிக்கும் மனிதன் வேண்டும் 

பொய்மைகளற்ற அன்புகள் வேண்டும் 
ஏக்கங்களற்ற வாழ்வும் வேண்டும் 
உதவும் கரங்கள் உதவிட வேண்டும் 
உயிரை உயிராய் மதித்தல் வேண்டும் 

உந்தன் அழகான மலர்வில் 
புதுமைகளதிகம் படைத்துவிடு 
தொடர்ந்தும் புரட்சிகளோடு பயணித்துவிடு
உலகை ஆண்ட ஒரு வருடமாய் பிறந்து
மனங்களில் என்றும் நிலைத்துவிடு


அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

சசிகுமார் said...

எப்பவும் போல அருமை ஹாசீம்

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

நன்றி தோழா எப்பவும் போல முதலில் பின்னூட்டமிட்டீர்கள்

தங்கம்பழனி said...

நல்ல வாழ்த்துக் கவிதை ஹாசிம் அவர்களே..!

ஆமினா said...

கவிதை அருமை!!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

நேசமுடன் ஹாசிம் said...

@தங்கம்பழனி

மிக்க நன்றி தோழரே....

நேசமுடன் ஹாசிம் said...

@ஆமினா

தங்களுக்கும் உரித்தாகட்டும்

மிக்க நன்றி

ஸாதிகா said...

சிறப்பான கவிதை.வாழ்த்துக்கள் சகோ!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...