இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, December 20, 2010

அச்சங்கொண்டு அடங்கிடாதே....


சொல்வதற்கு துணிந்துநில் 
வெல்வதற்கு எழுந்துநில் 
மாற்றானின் செய்கையில் 
அச்சங்கொண்டு அடங்கிடாதே


ஆளப் பிறந்தவனென்று 
ஆட்டிப் படைப்பவனையோ
வாதப் பிறவியென்று
விவாதம் செய்பவனையோ..
அச்சங்கொண்டு அடங்கிடாதே...


அவதூறே மொழியென்று
அகிலம் பரப்புவனையோ..
பொய்யே வாழ்வென்று 
பொரிந்து தள்ளுபவனையோ..
அச்சங்கொண்டு அடங்கிடாதே.


படித்தவன் நானென்று 
பண்பு மறந்தவனையோ 
வசதிபடைத்தவன் நானென்று 
பெருமை கொள்பவனையோ
அச்சங்கொண்டு அடங்கிடாதே.


பதவி தனக்கிருந்தும் 
பகிஸ்கரிக்கும் அதிகாரியையோ
சுறுசுறுப்பாய் தானிருந்தும் 
உழைக்க மறுப்பவனையோ 
அச்சங்கொண்டு அடங்கிடாதே.

அஞ்சாநெஞ்சனாய் அகிலம் வென்றிடு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

பிரஷா said...

ஆளப் பிறந்தவனென்று
ஆட்டிப் படைப்பவனையோ
வாதப் பிறவியென்று
விவாதம் செய்பவனையோ..
அச்சங்கொண்டு அடங்கிடாதே.
அருமையான வரிகள்..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...