இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, December 6, 2010

அனாதையெடி உன்னால்......

அனாதையடி நானும்
அதாரமில்லையெடி உன்னால்
நீ மறுத்த அன்பைத்தேடி
அனாதரவாய் தவிக்கிறேனடி

குழைந்து வழைந்து
நகம்கடித்து நாணித்தாய்
குழந்தை மனமுனக்கென
உள்ளமுனை தரிசித்தது

வண்ணச்சிலையாய் வீற்றிருந்து
வசீகரித்த உன்பார்வையில் 
சொக்கித்தவித்த என்மனமும் 
உன்பதிலுக்காக விண்தொட்டதே...

மொத்த அழகும் உனக்கென 
மொத்தமாய் கொடுத்துவிட்ட கடவுள்
உன் முகவரியில் 
என்னழகை தேடிடச்செய்தான்  


வடிவே... இல்லையவன் 
வேண்டாமெனக்கென
வஞ்சம் தீர்த்துவிட்டு - ஏனென் 
வாழ்வை அழித்துவிட்டாய்..?

நிலைபெறா உன்னழகும் 
நிலைத்திடா காலமொன்றில் 
உன்நிலை நொந்தழுது.
என்நிலையும் உணர்ந்திடுவாய்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

sakthi said...

நிலைபெறா உன்னழகும்
நிலைத்திடா காலமொன்றில்
உன்நிலை நொந்தழுது.
என்நிலையும் உணர்ந்திடுவாய்

அருமை....

ஹரிஸ் said...

கடைசி நான்கு வரிகள் உண்மையின் பிரதிபலிப்பு..அருமை..

சசிகுமார் said...

அருமை

ஆமினா said...

அழகான வரிகளின் வார்த்தைகளின் தொகுப்பு

வாழ்த்துக்கள் சகோ

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...