இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, December 12, 2010

வைரக் கண்ணீர்கள்.....(aids)

உன் தந்தைவழி தவறோ 
உன் தாய்விட்ட பிழையோ 
தங்கமே உனக்கும் 
AIDS என்ற கொடியநோய்

உன்பார்வையின் ஏக்கத்தில் 
பலகோடி வரிகளுண்டப்பா 
பிறந்தது உன்தவறா?
படைத்தவனைத்தான் கேட்கலாமா......?

ஆசைக்கு அடிபணிந்த 
அன்பர்களின் நடத்தையால்
இறப்புச் செய்தியோடு 
பிறப்பது கொடுமையடா...

இன்பம் தேடியலைந்து 
இளமையில் அடைந்தபேறாய் 
வாரிசாய் பிறந்த உனக்கு 
பரிசாய் தந்துவிட்டனர்...

அற்பசுகத்திற்கு அணைகட்ட முடியாமல்
சீறிப்பாய்ந்து சென்று 
சிக்கித்தவித்த படைப்பாளியால் 
சீரழிந்ததே உன்வாழ்வும் 

உன்போன்ற உள்ளங்களால் 
வடிக்கின்ற வைரக்கண்ணீர்கள் 
ஆறுகளாய் மாறியேனும் 
அசிங்கச்சாக்கடைகளான மனங்களை 
அலசித்தான் செல்லாதோ....

கருவுக்குப் படந்தந்த உரிமையாளருக்கு நன்றி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

பாரத்... பாரதி... said...

எந்த வித தவறும் செய்யாமல், மரணத்தேதியுடன் பூமிக்கும் வரும் குழந்தைக்கும் நேரும் கொடுமையை வலியுடன் படம் பிடித்திருக்கிறது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.

பாரத்... பாரதி... said...

இன்ட்லி, தமிழ்மணத்துடன் இணைக்கவும்..
எப்படி வாக்களிப்பது?

ஆமினா said...

பாவம் யாரோ செய்த தவறுக்கு யாரோ பழி ஏற்கிறார்கள்!!

சசிகுமார் said...

arumai

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...