இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, December 23, 2010

நீபோதும் இவ்வுலகில்

அன்பே உன் வதனமலர்வில் 
அகிலம் மறக்கின்றேன்
ஆதாரமற்ற வாழ்வில் 
உனையடைந்து மகிழ்கின்றேன்

உன்னாசை தீர்த்திட 
உயிராய் நானிருப்பேன் 
உத்தமனாய் வலம்வந்து 
ஊடலோடு கலந்திடுவேன் 

நீ போதும் இவ்வுலகில் 
உன்அன்பில் உயிர் வாழ்ந்து 
மடியும்வரை உனக்காவே
முழுவதுமாய் சேர்ந்திடுவேன்  

அழகே உன்கரம்பற்றி 
அதிகாரம் உனக்களித்ததால் 
உயிர்பிரிப்பதற்கும் உன்னிடமே 
அனுமதிக்காய் காத்திருப்பேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

ஆமினா said...

நல்லா இருங்குங்க

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...