கபடங்களறியா மனதுடன்
இதய சுத்தியோடும்
கவலைகளற்ற நாட்களோடும்
காலங்கள் கரைந்தன
இதயந் தேடிய
இனிய காவலனாய்
சுகங்கள் நிறைந்த
சுகமானவனாய்....
என் இதயத்தை திருடிவிட்டாய்
காத்திருப்பின் பிரதிபலனோ
கடவுளின் நிர்ணயமோ..
கதிரவனாய் காட்சிதந்து
கவ்விக்கொண்டாய் என்னையே..
ஏங்கிய காதலை
மிகைத்து அருந்திடச்செய்து
எப்போதுமுனையே.....
எதிர்பார்த்திட வைக்கிறாய்
ஏக்கத்தினைத் தாங்கிய
உணர்வுகளின் குவியல்களோடு
என் இதையமுனை நாடி
மலர்கிறது நாட்கள்.....

3 comments:
Nice
தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://tamilblogs.corank.com/
சூப்பர்!!!
ரசிச்சு படிச்சேன் :)
Post a Comment