இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, December 1, 2010

மனங்கலங்காதே...


காதல் என்றுரைத்து
திசைமாறும் வாழ்வற்று
சிதைந்திடா உணர்வுகளுடன்
காத்திருக்கிறாய் உன்துணைக்காக

காண்போரை நாடவில்லை
கைகோர்த்தும் நடக்கவில்லை
சமூகத்திரையினில்
உன்சரித்திரம் சிறந்ததே..

அகமகிழும் வாழ்வளிக்க
கடவுளின் நேரமும் கூடிவரும்
அவன் படைத்த உன்னவனும்
உன்போன்றே வந்து சேர்வான்

பெற்றகடன் தீர்த்திடவும்
உடன்பிறப்பு மகிழ்ந்திடவும்
சுயம்வரம் மலர்ந்துவிடும்
வாடா மலராய் சூடிடுவாய்

மனங்கலங்காதே தங்கையே
கணணித்திரை தந்த தமையனாய்
பாசங்கலந்த வேண்டுதலோடு
அந்தநாளுக்காய் பிரார்த்திக்கிறேன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

சசிகுமார் said...

அருமை ஹாசீம்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...