இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, December 22, 2010

அதிகாரியாயிரு

மனமே இல்லாத அதிகாரியாய்
மனிதனை மேய்த்து 
மனிதன் பிழைக்கிறான் 
உழைப்பைச்சுறண்டி உயர்வடைகிறான் 


ஏய் மனிதா......
இன்றையதினம் உனதானதால் 
ஆட்டிப்படைக்கிறாய் முடியும்வரை
தொழிலாழியானவனும் மனிதனடா


செய்தொழிலுக்கு ஊதியமோ
செய்வினைக்கு நன்றியோ 
அழித்திடாத உன் உயர்வோடு
துச்சமாடா உன்வாழ்வும்


அடையும்வரை ஆதரித்து
அடைந்தபின் அவமதித்து
நன்றியற்ற நடத்தையில் 
நலம்பெற முடிகிறதா....


இன்றல்லவேனும் நாளை 
மறுமைக்காய் காத்திரு 
பதில் தரும் நொடிவரும் 
கைசேதம் தேடிவரும் மனதில் தோண்றிய வடு ஒன்றுதான் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////அடையும்வரை ஆதரித்து
அடைந்தபின் அவமதித்து
நன்றியற்ற நடத்தையில்
நலம்பெற முடிகிறதா////

சிந்திக்கத் தூண்டும் வரிகள் அருமை முழுவதும் . பகிர்வுக்கு நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...