இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, August 28, 2011

மகிழ்ந்த மனம் மாலை சூடியது

என்தங்கையின் உலக ஜனனத்தில் 
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு 
பூரிக்கும் உள்ளத்துடன் 
பூச்சொரிந்து புகளெளுதவா 
பாமாலை சூடி பாராட்டுவதா 
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என 
திண்டாடும் நிமிடம் 
திகிலடைகிறேன் 

எதிலும் மிகைத்தவள் நீ 
உன்னை ஈன்றவர்களும் 
உனையடைந்தவரும் 
உன்னில் உதிர்ந்தனும் 
உன்னில் மகிழ்ந்தவர்களுமென 
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ 
உன்னறிவோடு தீட்டும் முனைகளால் 
திகைத்த தருணங்களில் 
உன்பெருமை கூறியிருக்கிறேன்
 எம் பிறப்பால் எதை சாதித்தோம் என்ற 
கேள்வியோடு மரணம் எமை சேர்ந்தாலும் 
எம்நாமம் உயிர்வாழ 
உலவுகின்ற நாட்களை 
உபயோகித்த மானிடருள் 
மாணிக்கம் நீ 


உன்னவன் வழியில் அவன் உயிராய் 
உணர்வுகளை உரமாக்கி 
விடியல்தேடும் வாழ்வோடு 
தமிழுக்குத்தொண்டாய் 
நண்பர்களுக்கு நலமாய் 
உங்களின் விஷ்வரூபம் 
பயன்களேயற்ற பயனுக்காய் 
வாழ்நாளை இரையாக்குவதில் 
வடிகிறது என்கண்களிலும்தான் 


சேனைத் தமிழ் உலாவோடு 
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய் 
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம் 
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது 
உடன்பிறவாச் சகோதரனாய் 
உனையடைந்த பெருமிதத்தில் 
புளகாங்கிதமடைகின்ற என் மனம் 
ஆனந்தக் கண்ணீர்களுடன் 
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட 
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன் 
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

இராஜராஜேஸ்வரி said...

எதிலும் மிகைத்தவள் நீ
உன்னை ஈன்றவர்களும்
உனையடைந்தவரும்
உன்னில் உதிர்ந்தனும்
உன்னில் மகிழ்ந்தவர்களுமென
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ //
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...