இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 6, 2011

அஸ்தமனம் நட்போடாகட்டும்நட்பெனும் உலகில் 
நன்மைகள் தேடி நானும் 
அலைந்த நாட்களதிகம் 
அடைந்த போதெல்லாம் மகிழ்ந்தேன் 


நட்பினைப் பேணிட 
நச்சரித்த உறவுகளைக்கூட 
துச்சமெனக் கொண்டு 
துணிந்திருந்தேன் தோழமைக்காக 


உயிரிலும் மேலான நட்பினால் 
உளம் மகிழ்ந்து உயிர்த்திருக்கிறேன் 
நட்போடுள்ள நளினங்களை 
நட்பின் வெகுமதியாக்கினேன் 
உலகவலம் ஒருகரையிலடைந்து 
நானடைந்த நண்பர்கூட்டமும் 
எனைத்தொடரல் கண்டு 
நான் கொண்ட பாக்கியமாக்கிறேன் 


இக்கரையும் நட்புகளாலானதில் 
தோழர்களின் நட்புக்காய் 
நான் கொண்ட வேட்கையில் 
பெருமையடைகிறேன் 


நட்பால் இணைவோம் 
அன்பால் உலகை வெல்வோமென்ற 
வாசகத்துடன் ஐக்கியமாகிறேன் 
எனைச் சுற்றி ஒரு பாசக் கூடு 


அன்றுரைத்தேன் நான் இளந்திலேன் 
நட்பினை என்றுமென்று 
உலக அஸ்தமனம்வரை 
நட்புக்காய் வாழ்ந்திடத்துடிக்கிறது என்மனம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

மஞ்சுபாஷிணி said...

நட்பைக்குறித்த மிக அருமையான கவிதை ஹாசிம்...

எந்த உறவுமில்லாத நட்பு உயர்வானது என்று சொல்ல உங்கள் வரிகளை இனி அடையாளம் காட்டலாம்பா..

அத்தனை உன்னதமான வரிகள் நீங்கள் எழுதியது....

அன்பு வாழ்த்துகள் ஹாசிம் நட்பைக்குறித்த உங்கள் அசத்தலான கண்ணோட்டத்திற்கு...

ஆமினா said...

நட்பின் உன்னதம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...