நான் அறிந்திருந்திடாத
பருவம் எனை அடைந்தபோது
தாயம்மாளின் அரவணைப்பில்
தாய்ப்பாசம் உணர்ந்த
நொடிகளின்னும் மறக்கவில்லை
தோழமையின் ஆரவாரத்துடன்
அகமகிழ்ந்த பூப்பெய்துவிழவில்
வெட்கித்தலை குனிந்து
வேதனைகள் மறந்தநிலை
என் வாழ்நாளில் மறக்கவில்லை
என் ஏக்கம் தொலைத்த
என் உயிரிலும் மேலான
தாயம்மாளின் மரணம்
தரணியை இழந்ததாக
உணர்த்தியதை மறக்கவில்லை
நடு நிசி ஓரிரவில்
காவல்காரனின் சில்மிசத்தை
எதிர்க்கத்துணிந்த போராட்டத்தில்
அவன் மண்டையுடைத்து
பொலிஸ் நிலயம்
சென்ற நாளை மறக்கவில்லை
அபயமளித்த இல்லத்திலும்
அவலநிலையென்று
அழுதழுது வற்றிப்போன
கண்ணீருக்காய்
காத்திருந்த நாட்களை
மனமேனோ மறக்கவில்லை
என் வாழ்வின் சூரியன்
எப்போது உதயமாவானென
விடியலைத்தேடிய போது
ஒளியொன்று புலர்ந்த
நொடியினை மறக்கவில்லை
எதிர்பார்ப்பு நிறைவுற்றதா?? இவள் தொடர்வாள்
2 comments:
அருமையான எளிய நடை :-)
தோழமையின் ஆரவாரத்துடன்
அகமகிழ்ந்த பூப்பெய்துவிழவில்
வெட்கித்தலை குனிந்து
வேதனைகள் மறந்தநிலை
என் வாழ்நாளில் மறக்கவில்லை
பெண்ணின் மன ஒட்டத்தை எடுத்துக்காட்டும் நூட்பமான வரிகள்
மிகவும் அருமை கவிஞரே!
தொடர்ந்து வருவேன் வாழ்த்துக்கள்!
என் வலைப் பக்கம் வரலாமே
புலவர் சா இராமாநுசம்
Post a Comment