மனித வாழ்வின் அந்தம் மரணமாகிறது
மரணமும் மனிதனுக்கு கற்றுத்தருகிறது
மனிதனாய் உன்னை வளப்படுத்திடு
நித்தியமற்ற உயிரோடுள்ளதுன் வாழ்வென்று
எங்கு மரணம் கண்டாலும்
மனம் மட்டுமே போராடுகிறது
மதியின் போராட்டத்தில்
நாட்களே வென்றுவிடுகிறது
சோகங்களெமை ஆழம்போது
சுமைகளை நினைக்கத்தோன்றுகிறது
உறவொன்றின் சோகமெமை
நிலைகுலைந்திடச் செய்திருந்தது
சேனையில் சுழன்றிருந்த அன்னையின்றி
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம்
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம்
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம்
எதிர்பார்ப்பற்ற உறவிதுவென்று
எத்திசையில் சோகமெனினும்
மறுதிசையில் வலியுணர்ந்தோம்
தேறுவதற்காறுதல் கூறிநின்றோம்
நண்பர்களுக்காறுதலாய்
பாவெழுதிய தமிழன்னையே
உமக்காறுதலுக்காய் வரிதேடிக்
கைசேதமாகி நிற்கிறேன்
உமக்காக எங்களது பிரார்த்தனைகள்
3 comments:
//எங்கு மரணம் கண்டாலும்
மனம் மட்டுமே போராடுகிறது
மதியின் போராட்டத்தில்
நாட்களே வென்றுவிடுகிறது//
சிறப்பான வரிகள் நண்பா
சோகங்களெமை ஆழம்போது
சுமைகளை நினைக்கத்தோன்றுகிறது
உறவொன்றின் சோகமெமை
நிலைகுலைந்திடச் செய்திருந்தது /
அருமையான ரொம்ப நல்ல கவிதை..
வாழ்த்துக்கள்..
எங்கு மரணம் கண்டாலும்
மனம் மட்டுமே போராடுகிறது
மதியின் போராட்டத்தில்
நாட்களே வென்றுவிடுகிறது
supper...
Post a Comment