இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, July 13, 2011

மௌனம் கலைத்துவிடு...

மனங்களொத்துறவாடி 
மகிழ்ந்திருந்த பொழுதுகளுக்குத்
துரோகமாய் இன்றுன் மௌனம் 

என் வாழ்வில் எதிர் பார்த்திருந்திடாத 
உன்னத நட்புறவாடினாய் 
உயிராயென்றும் கலந்திருந்தாய் 

உலகில் மரணந்தவிர 
எம் பந்தம் காணாது அந்தமென்ற 
உன் மொழி என் காதில் 
இன்னும் ஒலிக்கிறது


என் வாழ்த்தோடு மலர்ந்த 
உன் திருமணம் மட்டும் 
உன்னையும் என்னையும் 
ஊமைகளாக்கிவிட்டதேன் 

காதல் குறிக்கிடாத உயரிய 
நண்பர்களாயிருந்தேர்மே 
இன்று மௌனம் சாதித்தேன் 
சோதனை செய்கிறாய் 

கலைத்துவிடு உன்மௌனம் 
கண்ணீருக்கும் விடைகொடு 
நட்போடு மட்டும் நலம் பெற்றிடலாம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Niroo said...

அருமையான கவிதை

இராஜராஜேஸ்வரி said...

என் வாழ்வில் எதிர் பார்த்திருந்திடாத
உன்னத நட்புறவாடினாய்
உயிராயென்றும் கலந்திருந்தாய் //
மௌனம் கலையும் கவிதைக்குப்பாராட்டுக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தலான கவிதை நண்பா..
காங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.

தமிழ்வாசி - Prakash said...

நல்ல கவிதை பகிர்வு.

கவி அழகன் said...

அருமையான கவிதை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...