இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, July 6, 2011

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

நண்பனே நகைக்கிறதடா உலகம்
நம்தேசம்விட்டு நாம்கொண்ட வாழ்வோடு
சந்தோசங்கெட்ட சலனங்களால்
சஞ்சாரமான நாழிகைகள்

கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை
ஆயிரம் உறவுதிறந்த உணர்வுகளோடு
எம்தேசத்தவன் எங்கிருக்கிறான்
என்றல்லவா தேடுகிறது மனம்

ஆழத்தேடலில் அடைந்த நட்பும்
ஆரத்தழுவலில் அன்னையுலகம் காண்கிறது
தொலைந்த உறவுகளை அடைந்த உணர்வுடன்
தொலைவில் கிடைத்த தொன்மையாகிறது


அரியநட்பதை... அடைகாப்பதுபோல் 
அளவுக்திகமற்ற எதிர்பார்ப்பின்றி 
அன்பும் அறிவுடனும் மனந்திறந்துறவாடி
மகிழ்ந்திருக்க வேண்டாமா??

மதியின் வேட்கையுடன் சுயநலமிகுதியால் 
கலந்துமகிழ்ந்த கண்ணியமான உறவுதனை 
மறந்திடச்செய்கிறதே அம் மனதிற்கேன் 
கடிவாளமிட முடிவதில்லை - நின்று 
நிதானிக்க முடிவதில்லை 

சொந்தங்களாய் சேர்ந்திருந்து 
பந்தமொன்றை அறிமுகம்செய்துவிட்டு 
பண்டைய பகைவனாய் பகிஷ்கரிப்பதைத்தான் 
பார் பார்த்து பரிகாசம் செய்கிறது 
தோழா உணர்ந்து கொள்......

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...