பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கு அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
0 comments:
Post a Comment