இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, July 18, 2011

தேசங்களின் ஒற்றுமை...இயற்கை அன்னை ஈன்றளித்த
கடல்மாதா மடிமீது
தவழும் குழந்தைகளாய் மீனவர்கள்
ஒரு சாண் வயிற்றுக்கு
இரைதேடும் மனிதர்கள்

காரிருள் கண்ணை மறைக்க
காற்றின் திசைகளினூடே
ஓடத்தின் ஓட்டத்தில்
விடிந்த பின் தரைதேடுகிறார்கள்


இவன் மீறாத எல்லையுனதென்று
இயற்கையின் குற்றத்திற்காய்
அப்பாவியின் உயிர்பறித்து
அநியாயம் நிகழ்த்துவதேன்.

அதிகாரத்தின் அத்துமீறல்களால்
அனாதைகளாகும் மனிதர்களின்
அழுகுரல் ஓசையில்
பேரழிவும் ஏற்படுமே....

எல்லைகள் வேண்டும்
தேசத்தின் பாகுபாட்டிற்கு
சேதங்கள் வேண்டாம்
தேசங்களின் ஒற்றுமைக்கு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

ஆமினா said...

நல்ல சிந்தனை

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...