காதல் சொல்லவந்தேன் உன்னிடம்
காவல் எனைச்சுற்றி என்றுவிட்டாய்
ஏற்றுவிடு என்னையும் இல்லையேல்
ஏந்திடுவேன் சாவின் எல்லையை என்றேன்
வீராப்புப் பேசிவந்தாய்
வீண்வாதம் உரைத்துவந்தாய்
என்காதலுக்கென்ன குறை கண்டாய்
கனிந்துவிடு கண்மணி என்றேன்
தட்டிப்பணித்து என்னையும்
தட்டுத்தடுமாறிடச் செய்வதற்கா??
காதல் மொழி பேசிக் கண்ணனாய்
வலம் வருகிறாய் என்றாய்..
இல்லையெடி என்னவளே
உன்னோடு வாழ்ந்து மடிந்திட
உணர்வுகள் துடிக்கிறது
துரோகமற்ற காதல் என்னதடி என்றேன்
ஏனிந்த வாதமுனக்கு
ஏற்றிவிடு பூமாலையொன்று
ஏந்திவிடு பூவாக என்னையே” என்றாய் - ஏற்றியதனால்
மலராய்ச் சூடுகிறேன் தினமும் உன்னையே
2 comments:
வடை
ஏனிந்த வாதமுனக்கு
ஏற்றிவிடு பூமாலையொன்று
ஏந்திவிடு பூவாக என்னையே” என்றாய் - ஏற்றியதனால்
மலராய்ச் சூடுகிறேன் தினமும் உன்னையே//
அருமையாய் மனமுரைத்து மலர்ந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்.
Post a Comment