இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, September 20, 2010

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் 3வது ஆண்டு சிறப்புக்கவிதை..

பத்தாயிரம் கடந்த உறவுகண்டு
பல்லாயிரம் பதிவுகள் ஏற்று
பதிவுலகில் சிறந்த தளமாய்
பரபரக்கும் ஈகரையின் 3வது பிறந்தநாள்

பாரில் உருவெடுத்த
பாசமான அன்னையாய்
பாகுபாடுகளற்று நட்புடன்
பாவெழுதி பாராட்டப்படும் ஈகரை

உன்னதமான நேசர்களாய்
உறவு கலந்த தோழர்களாய்
உலவுகின்ற படைப்பாளிகளே
உயிரோட்டம் ஈகரைக்கு


தனிமனிதனாய் ஆக்கி
தங்க மகுடம் சூடக்கண்டு
தற்பெருமையுடன் நோக்கும்
தலை சிவாவினால் ஈகரை

ஒவ்வொருவராய் இணைந்து
ஒற்றுமையுடன் கைகோர்த்து
ஒவ்வாமை அகற்றிய
ஒய்யார விரூட்சம் ஈகரை

ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஆலமரமாய் வேரூண்றி
ஆதரவு நாடுவோருக்காய்
ஆதாரம் ஈகரை

உலகின் தேசங்கள் கடந்து
உண்மையான நேசத்துடன்
உரிமையுடன் பழகிட
உற்ற தளம் ஈகரை

முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்

புதிய உறவுகளின் வருகையில்
புண்ணியம் கண்டு
புத்துணர்வும் கொண்டு
புதுமை படைக்கிறது ஈகரை

இவ்வினிய நாளில்
இணைந்து பிரிந்தோருக்கும்
இன்றைய துடுப்புகளுக்கும்
இனிய நன்றி உரைக்கிறது ஈகரை

பல பரிமாணமாய் உருவெடுத்து
பண்பான உறவுகளை தனதாக்கி
பலம் பெற்றிருக்கும் ஈகரை
பல்லாண்டு உயிர்த்திட போற்றுகிறேன்

நன்றி மறப்பது நன்றன்று
நன்றி உரைக்கிறேன் ஈகரைக்கு
நன்றி அத்தனை உறவுகளுக்கும்
நன்றி ஈகரையை ஆக்கியொருக்கும்

நீடுழி வாழிய என்று
நீண்ட ஆயுழும் வேண்டி
நீதியின் பொருட்டால்
நீட்டுகிறேன் அன்புக்கரம்

குறிப்பு : இத்தனை வரிகளும் அத்தனை ஈகரையின் உன்னதமான உறவுகளுக்கே சமர்ப்பணம்
இதனை என் அன்பான நேசர்கள் வாசகர்கள் அனைவருடனும் பகிர்ந்ததில் ஆனந்தம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

சசிகுமார் said...

அருமை நண்பா வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

உங்கள் தமிழ் மண பட்டையில் வாக்களிப்பதில் பிரச்சினை உள்ளது பட்டையை கீழே கொண்டு வாருங்கள்.

யாதவன் said...

அழகான பெரிய கவிதை. தமிழ் மண ட்டையை கீழே கொண்டு வருவது எப்படி சசிகுமார்

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்
மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்
யாதவன் கேட்டது போல் எவ்வாறு அதனை கீழே கொண்டுவருவது என்று கூறிவிடுங்கள் நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்
மிக்க நன்றி யாதவன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...