இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, September 23, 2010

கற்பு காத்திடு...பாவை உன் முகம் பார்த்தேன் 
பார்த்ததும் அடைந்த பரவசத்தில் 
பாதை தடுமாற வைத்ததடி
பார் மறந்தேன் உன் முகம் நினைத்து 

என்னை கதிகலங்கச்செய்து 
என்னை கிறங்கச்செய்த முகம் 
எங்குபார்த்தாலும் என் பின்னே
எப்போது என்னை விட்டுடுவாய் என்றிருந்தேன்


ஏட்டுச்சுரக்காய் என்றிருந்தும் 
ஏழ்மை என்மனம் கலங்கியதில் 
ஏதுமறியா பாவியாய் 
ஏக விரதம் கொண்டேனே

கண்களின் குளிர்ச்சியில் 
கலங்கி நிற்பதில் சுகமில்லை 
கற்றுக்கொள் என்றுணர்த்தி
கற்பினை காத்திட வைத்தவள் நீ

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

சசிகுமார் said...

அருமை நண்பா

யாதவன் said...

அருமை பின்னி பெடல் எடுதிடிங்க

ஹேமா said...

பெரிய விடுமுறையில் இருந்துவிட்டேன் ஹாசிம்.நிறைய நாளுக்குப்பிறகு இன்றுதான் வருகிறேன் உங்கள் தளம்.

காதல் கவிதை அழகாய் வந்து
ஏன் இறுதியில் ஒரு குழப்பம் !

தளத்திலும்கூட!

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@ஹேமா

புரியவில்லை மேடம் தங்களின் கருத்து
காதல் கவிதைதான் இறுதியில் குளப்பம் ஏன் என்று கேட்டிருக்கிறீர்கள்
அடையமுடியாத காதலிது

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...