இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, September 16, 2010

தனிமையின் தவிப்பில்..தனிமையின் தவிப்பில்
தளிர்விடும் உணர்வுகளை
தட்டிப்பறிக்கும் உயிர்களால்
தனிமையாகும் மனிதங்கள்

உழைப்பதற்காய் அடியெடுத்து
உறவு திறந்து தனிமையுடன்
உயிரோடு மட்டுமான வாழ்கை
உணராத உரிமையாளர்கள்


சக்கையாய் உயிர்பிளிந்து
சம்பாத்தியம் காண்பது மட்டும்
சதிரம் ஓயுமுன் தொலைபேசி வேண்டுதல்கள்
சலனமற்று அத்தனையும் சமர்பணம்

மீண்டும் தொடர்தவிப்பு
மீழாத் துயர் நடிப்பு
மீட்டும் நாதமாய் மனதின்வடுக்களோடு
மீட்சி இல்லாத போராட்டம்

வட்ட வடிவம் வாழ்க்கைக்கு
வளர்ச்சி அற்ற வேட்கைகளுடன்
வலுவில்லாத வடிவமாய்
வறட்சியான பூச்சியம் வாழ்வாகிறது

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான கவி வாழ்த்துக்கள்

நேசமுடன் ஹாசிம் said...

@தமிழ்த்தோட்டம்

நன்றி தோழா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...