இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, March 2, 2011

ஆட்டம்.....சூதாட்டம்

ஓட்டங்களோடுள்ள ஆட்டம் 
தன்மானத்திற்கான போராட்டம்
என்றும் பார்வையாளர் கூட்டம் 
நிறைகின்ற அரங்கமோ வட்டம் 


திறமைக்கு வழிதிறந்த 
தாயகம் காத்திருக்க 
ஆட்டத்தினை நிர்ணயித்து 
வைக்கிறாயே பணயமுன்தாயை 


ஈன்றதோடு விட்டகன்ற 
மதாவுக்கதிகமாக 
மார்மீது சுமந்திருக்கும் 
இத்தாய்க்கு விலைபேசுகிறாய் 


ஏமாற்றந் தாளாத 
அன்னையோடு புதல்வர்களும் 
மனமுடைந்து உயிரிழந்து 
பரிதாபம் உம் சுயநலத்தினால் 


சூதாட்டம் எல்லாமே 
வேதங்கள் மறுத்தவைதான் 
நாட்டுக்காக மட்டுமாவது 
சூதாடாதிருப்பீரா.............??

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...