இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, March 16, 2011

(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???

உன்னிதயம் என்கைமாறியபோது 
என்னிதயம் தொலைந்து போனது 
என்னிதயம் பிறர்கைமாறியபோது 
உனக்கிதயம் இல்லையென்றானது 


இதயங்களின் பரிமாற்றத்தோடு 
இணைபிரியாக் காதலராய் 
நாம் வலம் வந்த நாளிகளைத் தேடுகிறேன் 
என்தனிமை பல சொய்திசொல்கிறது காதலில் கன்னியாய் மலர்ந்து 
தடம்பதித்திருந்த என்க்கு 
தடம்புரண்ட வாழ்வளித்த 
காதலையா குற்றஞ்சொல்வது 


கொஞ்சிக் குழைந்து பேசி 
காதலின் ரசனை உணர்த்தி
பாதிவழியில் பரிதவிக்கவிட்டு 
வேறுதுணையுடன் வீதியில் நடக்கும் 
உனைப்பார்த்தா குற்றஞ்சொல்வது 


உண்மைக் காதலுக்காய் 
தொலைந்த இதயம்தேடி
இன்னுமோர் உள்ளத்தினை 
ஏமாற்ற நினைக்காத..
என்மீது குற்றஞ்சொல்வதா??

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை?

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணனுக்கும் லவ் ஃபெயிலியர் போல

தோழி பிரஷா said...

சூப்பர்...

vidivelli said...

இந்த உலகம் மாறிப்போச்சு..
இதுதான் நியம்....
ஏமாற்ற நினைக்காதவன் ஏமாளியாகிறதாய் தான் இப்போது நடக்கும் சம்பவங்கள்...
அண்ணனுக்கும் இப்படி நடந்திச்சோ..
அல்ல உலக ஓட்டத்தை படைத்தீர்களோ?
நல்லாயிருக்குங்க...
அருமை........
வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...