இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, March 5, 2011

உன்னையும் நீ தேடு....


மனங்களில்லாத மனிதமெதற்கு 
மனிதங்களில்லாத வாழ்வெதற்கு 
வாழ்கையில்லாத தேடலெதற்கு 
தேடலில்லாத ஜீவனெதற்கு 


மனதில் வேதனையுடன் 
பணந்தான் வாழ்க்கையென்று 
பணம் மட்டும் தேடியலைந்து 
ஈற்றில் பணத்துடன் மடிந்திடுவதா ?


உன்னை உருக்குலைத்து 
உருவாக்கிய உடமைகளும் 
உன் குதூகலம் மறந்து 
தேடிவைத்த உரிமங்களும் 
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..


“உனைத்தொலைத்து எதைத்தேடுகிறாய் 
நாளை அத்தனையும் எதிராளியாகுமே” 
இன்றைய பயணத்தின் ..
தேடலோடுன்னையும் தேடிடு....


தேகங்கள் மரத்துப்போகிறது 
தேடலுக்காக ஒத்துப்போகிறது 
உன் காதுகளுக்கு மட்டும் 
ஏன் இன்னும் கேட்கவில்லை..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

well try

ஆயிஷா said...

arumai

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...