இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, February 27, 2011

மனம்வென்ற ஆட்சி.......

மக்களெனும் அமானிதம் 
மதிக்கப்படும் வரைதான் 
ஆளப்படும் வர்க்கமாகிறது 
அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு 
ஆங்காங்கே பதிலடிகள்...
நடந்தேறுகிறது.....


மக்களென்ற சக்திக்கு 
மடியாத மன்னர்களில்லை 
ஓங்கப்படும் கைகளுக்கு 
விலங்கிட முடிவதில்லை 
அதிகாரமுள்ளவரை 
ஆட்டமதிகம் நிலைப்பதில்லை


வினவப்படும் பொறுப்புகளோடு 
விரைகின்ற பொழுதுகளை 
மக்கள் மனம்வென்ற 
ஆட்சியோடு பயணித்து 
அரிய சிம்மாசனத்தில் 
அமைதியாக வீற்றிருக்க 
அகமுணர்ந்திடு மன்னா,,,,,!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...