இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, February 10, 2011

சகலமும் காதல்.....காதல்

வேறுபாடுகள் மறந்து 
அன்பின் வெளிப்பாட்டிற்கு 
அடிமையாவது காதல் 


ஒரு ஜனனத்தில் உருவாகி 
கொஞ்சும் மொழிகளில் 
கெஞ்ச வைப்பதும் காதல் 


எதிர்ப்புகளை ஏற்றெடுத்து 
வெறுப்புகளை அகற்றி 
வெல்ல நினைப்பதும் காதல் 


சொந்தங்கள் மறந்து 
பந்தங்கள் அறுத்து 
சுயநலங் காண்பதும் காதல் 


சூழலோடு இணைந்து 
சுற்றம் உணர்ந்திடா 
சுகங்கள் தேடுவதும் காதல் 


ஏழையாகிய காதலோடு 
ஏமாற்றங் கண்டும் 
ஏங்க வைப்பதும் காதல் 


சகலமும் வென்றிடும் காதல் 
சாதலோடு(மரணம்) மட்டும் 
என்றும் தோற்கிறது காதல்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

யாதவன் said...

நான்
என்னைப் பரிசளித்தேன்
பதிலுக்கு நீ
கண்ணீரை மிச்சம் வைத்தாய்..
காதல்

பாரத்... பாரதி... said...

காதலுக்கு மரியாதை சேர்க்கிறது...முடிவில் அழுத்தம்.

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி தோழர்களே என்வாசல் வந்து எனக்கும் ஊக்கம் தரும் தாங்களின் வரிகளில் உளம் மகிழ்கிறேன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...