இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, October 17, 2010

வென்றவனே விலைபோகாதே...

ஏழை மாணவனாய் 
ஏகவல்லோன் துணையில் 
ஏற்றம் கொண்டு கற்றதில் 
ஏறினான் பல்கலைக்கழகம் (பொறியியலாளனாய்)

கடந்த பாதையில் கிடந்த 
கற்களும் முட்களுமாய் தடங்கள் பல
கண்ணீருடன் அயராது - கல்வியை 
கற்றுத்தேறியவன் 


தந்தையின் வியர்வையில் 
தமையனின் வழிகாட்டலுடன் 
தட்டுத்தடுமாறி 
தலைநிமிர்ந்த வெற்றியாளன் 

இவனையும் அடிமையாக்கிட
இமயம் கடந்த பணத்துடன் 
இவன் பின்னே மாமனார் கூட்டமொன்று 
இவன் பதவியை தன்மகளுக்காக்கிட

பணம் படைத்தவனாய் 
பகிர்ந்திடாத கஞ்சன் 
பட்டம் அடைந்ததற்காய் 
படி ஏறுகிறான் அடிமைவிலங்கிட

திண்டாடும் படித்தவனே
திசை திரும்பிடாதே பணத்திற்காய் 
திகைப்பூட்டும் வெற்றிகள் பல 
திண்ணமடா உன் வழியில்....

இந்த படித்தவனின் முடிவு மற்றுமொரு கவிதையாக தொடரும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

சசிகுமார் said...

அருமை வாழ்த்துக்கள் நண்பா

ராஜகோபால் said...

good nice my friend...

http://www.cineikons.com said...

சினிமா கேலரி · Latest Tamil Video · வீடியோ · Tamil Cinema News Functions, kollywood gossips.sun tv serials,Tamil tv serials online, Tamil tv Shows online கோலிவுட் கிசுகிசு சினிமா செய்திகள்,Tamil Songs தமிழ் MP3 பாடல்கள் · தமிழ் வானொலி · MP3 பாடல்கள்

http://www.cineikons.com

http://cineikons.com

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...